இடித்துச் சென்ற ஆட்டோவின்
பின்புறக் கண்ணாடியை
உடைத்த
வயதான பைத்தியக்காரியின்
மனதில் இன்னுமிருக்கலாம்,
ஓடிப்போன கணவனோ,
துரத்திவிட்ட உறவோ,
அவள் மனம் பிறழ்ந்த
அந்தக் கணமோ.....
இறங்கி வந்த ஆட்டோக்காரன்
விட்ட அறையில்
இருக்கலாம்,
திரும்பிப் படுத்துக்கொண்ட மனைவி,
கடன் கொடுத்தவனின் வார்த்தை,
பணம் பிடுங்கிய யாரோ போலீஸ்காரன்
மீதான கோபம்....
விலக்கிவிட்டு,
அவளை அக்கறையோடு
அனுப்பி வைத்த
போலீஸ்காரன் வீட்டில் இருக்கலாம்,
அவன்
நெற்றியிலோ,
உதட்டிலோ,
கன்னத்திலோ,
முத்தமிட
அன்பான ஒரு பெண்.
11 comments:
Hi seral,
This is the first time i read your blog entry. I am really sorry for that.. but i will keep reading it from now onwards. Because The first one read got me interested. Good work.. Keep posting good stuff.
சேரா.. அருமை... :) எனக்கு வேறெதுவும் சொல்லத்தோணல..
absolutely..!
-nice thought..!
வணக்கம் தோழரே,
எந்த ஒரு உயிரியின் அகச் சூழலும், புறச் சூழல் சார்ந்தே அமைந்து விடுகிறது.புறச் சூழல் சார்ந்து வாழும் மனிதனின் உணர்வுகளின் உணர்ச்சிகளும் அதை சார்ந்தே அமைந்து விடும் என்பது உளவியல் கூறு. அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்...
இலக்கியத்தின் லாவகமும், இயல்பு மொழியும் நன்றாகவே தெரிந்த உங்களுக்கு கவிதையில் சூட்சுமங்களை கொண்டுவரும் வித்தை தெரிகிறது...
///திரும்பிப் படுத்துக்கொண்ட மனைவி,///
எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் நினைத்து நினைத்து...
அன்புடன்
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
@rectianarun
நன்றி! நல்ல படைப்புகளைத் தர எப்போதும் முயற்சி செய்கிறேன்.
@Bee'morgan
நன்றி பாலா!
@Vilva
நன்றி நண்பா!
@gokul
நன்றி கோகுல்!
புறச்சூழலில் நம் செயல்களும், அகச்சூழல் சார்ந்ததாகவே அமைந்து விடுகின்றன என்பது என் கருத்து.
-ப்ரியமுடன்
சேரல்
வணக்கம் தோழரே,
தங்களுடைய கருத்தில் உடன்படுகிறேன். அகத்தை சரியாக வைத்திருப்போர் அளவுகளிலும் எண்ணிக்கைகளிலும் குறைவு.
என்பது என் கருத்து...
அன்புடன்
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
என்னை எழுதச்செய்கின்ற உந்துதலும் இருக்கிறது
'நானெல்லாம் ஏன் எழுதுகிறேன்' என்ற உறுத்தலும் தருகிறது!!
உன் சிகை நரைத்ததாகத் தகவல் இல்லை...சிந்தனை நரைத்திருக்கிறது
நன்றி பூபி!
உன்னை எழுதச் செய்யும் உந்துதல் என் எழுத்தில் இருந்தால் நான் மிகவும் மகிழ்வேன். 'நானெல்லாம் ஏன் எழுதுகிறேன்' என்ற உறுத்தலைத் தந்தால் மிகவும் வருத்தப் படுவேன்.
-ப்ரியமுடன்
சேரல்
உறுத்தலுக்கு மறுத்தலுமா? :)
மிகச்சாதாரணமான வார்த்தைகள் கொண்டு அசாதாரணமான வாழ்வியல் உண்மை ஒன்று சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே! உறக்கத்தில் என்னை நீங்கள் எட்டி உதைத்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன்....
- அறை நண்பன் சுபி :)
அசாதாரணம் என்று எதுவுமே கிடையாது நண்பா, சாதாரணத்தின் இருப்பைப் போற்றத் தொடங்கிய பிறகு
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment