ஆயுதம் தெரிவு செய்
இலக்கினைத் தீர்மானி
குறி மேல் கவனம் குவி
தளம் தகர்
குடல் சரித்துக்
குருதி பெருக்கு
எங்கும் சிவப்பு
நிறைந்து பெருகட்டும்
உயிர் பிரியும்
உன்னதம் ரசி
பிணக்குவியலில்
அரியணையேறு
மண்டையோடுகளில்
மகுடம் சூடு
பயிற்சிகள் வீணாவதில்லை!
உடனிருப்பவனின்
உயிர் பறிக்கவேனும்
உபாயம் சொல்லித்தரும்
நாளை,
போருக்காக நீயோ,
உனக்காக ஒரு போரோ
காத்திருத்தல் நிச்சயம்
அதுவரை.....
ஆயத்தம் செய்துகொள்.....
வீடியோ கேம்களில்
10 comments:
அண்ணாத்தே! இம்புட்டு ஷோக்கா உலக அமைதி பத்தி, பத்தி பத்தியா பேசறானுங்க. தம்மா துண்டு வீடியோ கேம்-லேயே வன்முறைய வச்சு குழந்தைகளத் தூண்டி விடரவனுங்களுக்குத் தடா போடாம இருக்கானுங்க. நச்சுன்னு உங்க பிச்சுலயே சொல்லிட்டீங்க. ரொம்ப நல்லா இருக்குது. திருந்தரவங்க திருத்தரவங்க கைல போய் சேர்ந்தா இன்னும் நல்லா இருக்கும்.
- துப்பாக்கி, ரத்தம் காட்டும் வீடியோ கேம்-களப் பார்த்தாலே காண்டு ஆகும் குடிமகன்.
வணக்கம் தோழரே,
முதலில் முழுதாய் வசிக்கும் முன்பு நவீன ஆத்திச்சூடி என்றுதான் நினைத்தேன்.இறுதியில் தான் அந்த டுவிஸ்ட் இருந்ததை உணர்ந்தேன்...
///எங்கும் சிவப்பு நிறைந்து பெருகட்டும்/// நீங்கள் சொல்லுவது வேறு எதையாவது குறிக்குமெனில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதை மட்டுமே சொல்லத்தோன்றுகிறது...மற்றபடி அழகான பெண்களும் தோழரின் கவிதைகளும் எப்பொழுதும் சிலிர்ப்பானவை...வேறென்ன சொல்ல...
அன்புடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
@ Subi
உண்மைதான் நண்பா!
@ கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
நன்றி தோழரே!
//எங்கும் சிவப்பு நிறைந்து பெருகட்டும்//
நீங்கள் நினைக்கும் கருத்தில் அதை நான் எழுதவில்லை. உண்மையில் நீங்கள் சொல்லும் வரை இப்படி ஒரு அர்த்தம் தோன்றலாம் என்றெனக்குத் தோன்றவே இல்லை. நான் எழுதியது ஒன்றுக்கொன்று தொடர்புடைய வேறு இரண்டு அர்த்தங்களில்...
-ப்ரியமுடன்
சேரல்
//மற்றபடி அழகான பெண்களும் தோழரின் கவிதைகளும் எப்பொழுதும் சிலிர்ப்பானவை//
:)
//அதுவரை.....
ஆயத்தம் செய்துகொள்.....
வீடியோ கேம்களில்//
sariyaana varikalnanbaree
@ மண்குதிரை,
நன்றி நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
Excellent! Enjoyed Every line of it..
Amazing post Seralathan...
I am doing this every day :-) and Bhupesh recommended this post to me.
I have started reading your blogs and most of them are quite impressive.
Keep writing
Excellent! Enjoyed every line of it..
I am doing this everyday and Bhupesh suggested me to go through this..
I have started going through your blogs and most of them are impressive.
Keep writing :-)
கோகிலாக்கா இல்லாத பொழிதில்
அவள் வீடு போன உன்னை
அவள் கணவன் சுவரோடு வைத்தணைத்து
இதழ்கவ்வி உடல்முகர்ந்தபோது
பாப்பா ... ஏன் மறந்தாய் மறுக்க?
பக்குவம் பற்றாது
அரளிவிதையை இன்னும் நன்றாக
அரை பாப்பா,
- மகுடேசுவரன் (இன்னும் தொலையாத தனிமை, தமிழினி பதிப்பகம்)
எப்படி இத்தனை நாள் இந்தப் பதிவினை விட்டேன் எனத் தெரியவில்லை....
வலைப்பூக்களுக்கு நடுவே ஒரு வாசமிக்க பூ....
நான் வெளிப்படுத்தத் துடிக்கும் எண்ணங்களுக்கு , உங்கள் கவிதைகளில் வார்த்தை உடைகள் அழகாய் மின்னுன்றன...
வாழ்த்துக்கள் சேரல்
Post a Comment