புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, March 30, 2009

வடிகால்

ஏதேதோ கோபங்களோடு
வீடடைகிறேன்

ஓர் அறை
கொடுத்தால்
கோபம் தணியலாம்...

நீ
வீட்டிலில்லை

காத்திருத்தலில்
நேரத்தோடு
சேர்ந்து கரைகின்றன
முந்தைய கோபங்களும்

அறைவாங்க
நீயில்லையென்ற
கோபம் மட்டும்
இப்போது
காத்திருக்கிறது
உன்னை அறைய

6 comments:

G K said...

தோழரே!
உங்களுடைய கவிதைகளை படிக்கும்பொழுது உங்கள் முகம் நினைவில் வந்து விடுகிறது. அந்த கவிதைகளை எழுதும்பொழுது உங்களுடைய உடல் அசைவு மொழிகள், உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பது என் நினைவில் வந்துவிடுகிறது. இதனை உங்களிடம் முன்னரே சொல்லவேண்டும் என்று எண்ணியதுண்டு.
"வடிகால்" படிக்கும்பொழுது உங்களுடைய ருத்திரமான முகம் தான் நினைவுக்கு வந்தது. இது சரியா இல்லை தவறா என்று தெரியவில்லை.

///அறைவாங்க
நீயில்லையென்ற
கோபம் மட்டும்
இப்போது
காத்திருக்கிறது
உன்னை அறைய ///

எப்படி சொல்வது என்று தெரியவில்லை...அருமை தோழரே...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி கோகுல்!

உள் மன உணர்வுகளை வெளியில் மறைக்கும் திறனற்றவன் நான். இது என் பலமா பலவீனமா என்பது தெரியாது. நண்பர்கள் பலரும் இது பலவீனமேன்றே கூறி, என்னை மாற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். ஆனால், அது இன்னும் இயலாத காரியமாகவே இருக்கிறது.

எழுதும்போது என் முகம் நீங்கள் சொல்கிற மாதிரியும் இருந்திருக்கலாம்.

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

கோகுல்-அண்ணே! என் கூடத்தான்னே பேசிக்கிட்டு இருப்பான்.. ஒரு பேனா.. ஒரு நோட்டு.. கை-ல வச்சிப் பார்த்திட்டு இருப்பான்.. மத்தபடி எப்ப இப்படியெல்லாம் எழுதறான்னே புரிய மாட்டேங்குது..

எனக்கு வாய்ச்ச ரூம் மேட்ஸ்-லாம் அமானுஷியங்களா இருக்குங்க.. கொஞ்சம் உங்க வூட்டாண்ட இடமிருந்த சொல்லுங்களேன்.. உங்களுக்கு புண்ணியமா போகும்.

G K said...

@ சேரலாதன் / சுபி
தோழர்காள்..

நீங்க எழுதியதை படிக்கும் பொழுது தான் எங்கள் அறையில் ஒரு ஜீவன் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கும் என்பது புரிகிறது...

anujanya said...

Nice poem and even more interesting conversations btw u guys :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அனுஜன்யா!

-ப்ரியமுடன்
சேரல்