புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, April 12, 2009

'இரண்டு' கவிதைகள்அய்யா தருமம் பண்ணுங்க

சில்லறை இல்லம்மா

சட்டைப்பைக்குள்
கனம் கூ(ட்)டுகிறது
இல்லாததாய்ச் சொன்ன
இரண்டு ரூபாய்


----------------------------------


மீண்டும் ஒருமுறை
கவுன்ட்டரில் உட்கார்ந்திருக்கும்
அந்தப் பருத்த மனிதரைப்
பார்த்தேன்

அவரும் என்னைப்
பார்த்தாற்போன்றிருந்தது

எப்படிக் கூட்டியும்
இரண்டு ரூபாய்
அதிகமாகத் தோன்றியது
எனக்கு

நான்
கொடுத்தத் தொகையில்
இரண்டு ரூபாய்
குறைந்திருக்கலாம் அவருக்கு

நாள் முழுவதும்
நினைவை அரித்துத்
தவிக்கச் செய்துவிட்டது
இரண்டு ரூபாய்

எண்களில்
இரண்டின் பயன்பாடு
அதிகமானதாகத்
தோன்றிய பிம்பத்தில்,
பள்ளிக் குழந்தையின்
இரட்டைச் சடை கூட
குழம்பச் செய்தது

அவரும் கூட
அமைதியிழந்து
ஸ்தம்பித்திருக்கலாம்
என்னைப் போலவே

யாதுமற்ற வெளியில்
மிதந்து கொண்டிருக்கிறது
இரண்டு ரூபாய்,
யாரிடமும் சேராமல்...

11 comments:

பிரவின்ஸ்கா said...

நன்றாக இருக்கிறது கவிதை

கே.ரவிஷங்கர் said...

முதல் கவிதை நல்லா இருக்கு.

இரண்டாவது கவிதை கொஞ்சம் finetune பண்ணலாம்.

வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

:-))

கவிதை நல்லாயிருக்குங்க

ஆ.முத்துராமலிங்கம் said...

இரண்டாவது கவிதை
நன்று. எல்லோருமே ஏதாவதொரு தருணத்தில் இப்படி மனதை தவிக்க விட்டு விடுகின்றோம்.

இக்கவிதையை படிக்கையில் எனக்கு முன்பே படித்த ஒரு கவிதை நியாவகத்துக்கு வந்தது.

|எதையும் ரசிக்கவிட வில்லை
நடத்துனரிடம் சில்லரை பாக்கி|

(வரிகள் மாறி இருக்கலாம் சரியாக நினைவில்லை)

சேரல் said...

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம் தோழரே...

///யாதுமற்ற வெளியில்
மிதந்து கொண்டிருக்கிறது
இரண்டு ரூபாய்,
யாரிடமும் சேராமல்...///

கவிதை நன்றாக இருக்கிறது...

குறிப்பு:-
அரசியல் பகடி செய்வது போலத்
தெரிகிறது தோழரே...

ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்...

சேரல் said...

நன்றி தோழரே!

அட. இது கூட நன்றாக இருக்கிறதே. இது எனக்குத் தோன்றவே இல்லை.

-ப்ரியமுடன்
சேரல்

yathra said...

நல்லா இருக்குங்க கவிதைகள்

சேரல் said...

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

//சட்டைப்பைக்குள்
கனம் கூ(ட்)டுகிறது
இல்லாததாய்ச் சொன்ன
இரண்டு ரூபாய்//

அருமையாக இருக்கிறது.

சேரல் said...

@மண்குதிரை

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்