புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, April 26, 2009

தலைமுறை

ஊருக்கெல்லாம்
குளம் வெட்டி
நீர்க்கொடை
செய்து வைத்த
பெரியசாமி அண்ணாச்சியின்
பேரன்
சொல்கிறான்

'ஸ்...... அப்பா!
இந்த
பெப்ஸி
குடிச்சாத்தான்
தாகமே அடங்குது!'

9 comments:

ச.பிரேம்குமார் said...

இது தலைமுறை இடைவெளியா? வெட்டி பந்தாவா??

பெப்ஸி குடிச்சா தாகம் அடங்குமா????

ஆ.சுதா said...

//வெட்டி பந்தாவா??//
பிரேம் நச்! உண்மை வெட்டி பந்தாதான் இப்ப விஜை கூட டிவியில பண்றார!!!

//பெப்ஸி குடிச்சா தாகம் அடங்குமா????/

அடங்காது அது மன 'பிராந்தி'

சேரல் சார் அத ஏக்கமா சொல்றாங்க.

gayathri said...

ihtula enna santegam intha thalaimurai pantha than

யாத்ரா said...

என்ன பண்றது சேரல், இப்படி இருக்கு ம்,,,,

கவிதை அருமை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@பிரேம்குமார்
முத்து ராமலிங்கம் சார் சொல்வது போல இது மனப்பிராந்தியாக இருக்கலாம். காண்கின்ற அனுபவம் அவ்வளவே. எந்தவிதமான போதனையோ கற்பிதமோ இல்லை. நீங்கள் சொல்வது போல வெட்டி பந்தாவாக இருக்க வாய்ப்பு அதிகம்.

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி நண்பரே! இது இந்தத் தலைமுறை பார்த்து வரும் ஏக்கம் தான்.

@gayathri
நன்றி தோழி!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

@yathra
நன்றி நண்பரே!
இப்படியும் இருக்கிறது

-ப்ரியமுடன்
சேரல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது முரணைச் சொல்லும் ஒரு ஸ்டேட்மெண்டாக நின்றுவிடுகிறது. கவிதையாக மாறவில்லை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ஜ்யோவ்ராம் சுந்தர்

இருக்கலாம். தோன்றியதை எழுதினேன். உணர்வுகள் கடத்தப்படும் ஊடகமாக எழுத்தைப் பார்க்கிறேன் நான். அழகியல் கொஞ்சம் குறையலாம். ஆனால் ஆத்மா இருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

இராவணன் said...

உட்கருத்து அருமை.

நம் தண்ணீரை அவன் நமக்கே காசுக்கு விற்கும்பொழுது வேறு எதைபற்றி பேசி என்ன

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

உண்மைதான் இலக்குவண். அதையும் வாங்கிக் குடிக்கிறோமே, நம்மை என்ன சொல்ல?

-ப்ரியமுடன்
சேரல்