புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, April 14, 2009

அழகெனப்படுவது

வேண்டாம்,
அசிங்கமென
எறியப்பட்ட
பஞ்சடைந்த
ரோஸ் நிற தேவதை பொம்மை
புழுதியில் அழுந்தி,
அழுக்காகி,
பின்
இரயில் நிலையத்தில்
இராப்பொழுதில்
தூங்கும் சிறுவனின்
மார்போடுறங்கி
அழகாகியிருந்தது

15 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

//இரயில் நிலையத்தில்
இராப்பொழுதில்
தூங்கும் சிறுவனின்
மார்போடுறங்கி
அழகாகியிருந்தது //

அழகாக சொல்லியிருக்கீங்க
நல்லா இருக்கு.

பிரேம்குமார் said...

அருமையான கவிதை சேரல். வாழ்த்துகள்

சேரல் said...

@ஆ.முத்துராமலிங்கம், @பிரேம்குமார்
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

Dharini said...

சேரலாதன்,
உன்னுடைய படைப்புக்களை படிக்க பெருமையாக உள்ளது.
தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.

சேரல் said...

@Dharini

நன்றி தோழி!

-ப்ரியமுடன்
சேரல்

திகழ்மிளிர் said...

அருமை நண்பரே

பரத் said...

அருமையான கவிதை !!

சேரல் said...

@திகழ்மிளிர், @பரத்
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

ராஜ நடராஜன் said...

ஓ!இப்படியும் மெல்லிய கவிதை சொல்ல முடியுமோ?

(நான் உரைநடை நடை நடைக்காரனுங்க அதனாலதான்:))

சேரல் said...

@ராஜ நடராஜன்,

நன்றி நண்பரே!
உரைநடை இலக்கியம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவந்து விடுவதும் இல்லை. உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். உங்களுக்கு நன்றாகவே கைவருவதாகத் தோன்றுகிறது. வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

இதுவும் அழகாக இருக்கிறது.

சேரல் said...

நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

அனுஜன்யா said...

கடைசி வரியில் கவிதையும் மிக மிக ஆழகாகிறது. அருமை.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/பஞ்சடைந்த/

பஞ்சடைத்த?

சேரல் said...

நன்றி அனுஜன்யா!

@ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி நண்பரே!

'பஞ்சடைந்த' என்பது பொம்மையை முதல் நிலைப் பொருளாகக் கொண்டால் சரியே!

-ப்ரியமுடன்
சேரல்