புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, July 20, 2009

நன்றியும், விருப்பமும்


நேசமித்ரன் அவர்களின் அன்புக்கு நன்றி! அன்புக்கு நன்றி செய்துவிட ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்ன?

சுவாரஸ்யம் நிறைந்த வலைப்பூ என்ற விருதினை வழங்கியிருக்கிறார் நண்பர் நேசமித்ரன். மகிழ்ச்சி. என்னோடு இந்த விருதினை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தமிழ்நதி, நந்தா, பிரவின்ஸ்கா, ச.முத்துவேல் மற்றும் கௌரிப்ரியா இவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இப்போது, இந்த விருதினை நான் ரசிக்கும், வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டிய தருணத்தில் நான் இருக்கிறேன். சிலர் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்; நான் தொடந்து படிக்கும் மீதமிருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் எனக்கு நண்பர்களாய் இருக்கிறார்கள். அவர்களும், வேறு யாரேனும் விருது கொடுத்து, அங்கீகாரம் பெறும் தகுதி உடையவர்களே. நான் கொடுப்பதை விட, முகம் தெரியாத யாரோ கொடுப்பதே அவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும். எனவே, நான் மிகப் பிரயத்தனப்பட்டு கண்டெடுத்த ஆறு பேர் பெயர்களை மட்டும் தருகிறேன். இவர்கள் என்னைக் கவர்ந்த பல ஆக்கங்களைத் தந்திருப்பவர்கள். இதில் இடம்பெறாத பலரும் கூட எனக்கு விருப்பமானவர்களே! ஆனால், நான் மேற்சொன்ன காரணத்தினாலும், ஆறு பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டினாலும் அவர்கள் பெயர்களைச் சொல்ல முடியவில்லை. மற்றபடி, அனைவரும் விருப்பத்துக்குரியவர்களே!

கார்த்தி - நீ
திக்குமுக்காடச் செய்துவிடும் பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் இவர். ஒத்த வயதுக்காரன் என்ற பெயரில் இவர் எனக்கிட்ட பின்னூட்டம் இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது. வித்தியாசமான வாசிப்பானுபவத்தைத் தரும் என் விருப்பமான ஒரு படைப்பாளி

வெங்கிராஜா - பாதசாரியின் பால்வீதி
இவரது புகைப்படங்களுக்கு நான் மிகப்பெரிய விசிறி. இவரது எழுத்தும் கொஞ்சம் வித்தியாசமானதே.

மண்குதிரை - மண்குதிரை
என் விருப்பக் கவிஞர். மிக அற்புதமான கவிதைகளை சாதாரணமாக வழங்கும் அசாத்திய திறன் கொண்டவர்.

யாத்ரா - யாத்ரா
வாழ்க்கையின் இருள் பக்கங்களைக் கவிதையாக்கும் என் பிரியத்துக்குரிய நண்பர். வலைப்பூவின் மூலமாக என் நண்பரானவர். இவரது வலைப்பூவைப் படிக்கும் யாரும், அமைதியற்ற ஒரு நிலையை சில நிமிடங்களுக்கேனும் பெறுவது நிச்சயம். அது எனக்குப் பிடித்தே இருக்கிறது.

ராஜா சந்திரசேகர் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்
வாழ்கையின் அற்புதமான, அழகான விஷயங்களைப் பதிவு செய்யும் ஒரு கருவி இவருக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார்கள்.

காயத்ரி - பாலைத்திணை
இவர் கடைசியாகப் பதிவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகின்றன. ஆனால், அடுத்தப் பதிவை எப்போது இடுவார் என்ற எதிர்பார்ப்போடு எப்போதும் இருக்கிறேன். என்னை இப்படிச் செய்தவை இவரது கவிதைகள்.

இங்கே நான் கொடுத்திருக்கும் பதிவர்கள் பெரும்பாலும் உங்களுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். என் விருப்பத்தெரிவின் மிகச் சிறிய பட்டியல் இது. இது போன்றதொரு விருப்பப்பட்டியலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய நண்பர் நேசமித்ரனுக்கு மீண்டும் நன்றிகள்.

13 comments:

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் சேரல் :)

யாத்ரா said...

அன்பு சேரல், மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது நண்பா, தொடர்ந்து அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இம்மாதிரி தருணங்களில் என்ன சொல்வதென்றே தெரியாமல் போய் விடுகிறது, இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் என் அன்பும் நன்றியும்.

முதலில் உங்களுக்கு வாழ்த்துகள், நேசமித்ரன் தளத்திலேயே சொல்ல மிகவும் பிரயாசைப்பட்டேன்.

வழக்கம் போல என் கணினியிலிருந்து, நேசமித்ரன் தளத்திருப்பது போன்றான பின்னூட்ட அமைப்பு முறையில், பின்னூட்டமிட இயலாமல் இருக்கிறது. அவரது பல கவிதைகளை படித்து ரசித்தும் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் போகிறது.

நண்பர் நேசமித்ரன், இப்பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தால், தங்கள் தள பின்னூட்ட அமைப்பு முறையை, comments click செய்தவுடன் வேறு பக்கத்தில் comments தோன்றுவது போல் comments settings ஐ மாற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன், ஏனெனில் அம்மாதிரி இருக்கும் தளங்களில் தான் என்னால் பின்னூட்டமிட முடிகிறது,இப்படித் தான் பா.ராஜாராம் அவர்களின் தளத்திலும் இருக்கிறது. இவர்களுக்கு மெயில் ஐடி இல்லாததால், இதைத் தெரிவிக்க இங்கே இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் தளத்தை பயன்படுத்திக்கொண்டேன், நன்றி நண்பா.

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

தங்களுக்கும் தங்கள் வழி பெற்ற மற்றவர்களுக்கும்.

ராஜா சந்திரசேகர் said...

இனிய சேரல்
மிக்க நன்றி
நெகிழ்வான அன்பிற்கும்,நேசம் நிறைந்த பகிர்வுக்கும்.

Vidhoosh said...

நல்ல தேர்வுகள் சேரல். வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது நல்ல வலைத்தளங்களைப் பார்க்கும் போது.

காயத்ரி சித்தார்த் said...

மிக்க நன்றி சேரல்! நானே மறந்து போய்விட்ட என் வலைப்பூவை நினைவூட்டியதற்கும் சிறப்பு நன்றிகள்! :) திருமணம், முனைவர் பட்ட ஆய்வுப் பணிகள்.. என காலம் வேறு திசையில் இழுத்துப் போய்க் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் பதிவுலகிற்குத் திரும்புவேன் என நம்புகிறேன்.

மண்குதிரை said...

உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

Venkatesh Kumaravel said...

அட! பட்டியலைப் பாருங்கள்.. எல்லோரும் பல ஆண்டுகள் வாசிப்பனுபவமும் வலைப்பரிச்சயமும் உள்ளவர்கள். இவர்களுக்கு நடுவில்.... தன்யனானேன்.
நம் ரசனை ஒன்றுபோனது கண்டு மகிழ்கிறேன். விருது பெற்ற பிறர்க்கும் வாழ்த்துகள்!!

நேசமித்ரன் said...

நன்றி சேரல் விருதினை ஏற்றுக் கொண்டதற்கு
இந்த பின்னூட்டத்தை யாத்ராவுடன் பேசk கொடுத்த வாய்ப்புக்கு ....
@ யாத்ரா
இமைகளின் கீழ் emery பேப்பர் ஒட்டிவிடும் உங்கள் வரிகள்

//பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள் எதிர்வீட்டு யுவதி இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன் அந்த நாயை // //வசதியாக குற்றங்களையெல்லாம்
உன்மீதே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்////வெற்றுவெளியில் காலுதைத்து காற்றில் கரங்களைத் துழாவி முலையென விரல் சுப்பி
தவழ்தலின் முன்வைப்பாய் கவிழ்ந்து////சுருக்குக் கயிற்றில் சங்கிறுக
விழிவெறிக்க நாத்தள்ள குறிவிறைத்து உயிர்த்துளி கசிய////நினைவு பொல்லாதது எதையும் வைக்காதீர்கள் நினைவில்////கொலுசின் உதிர்ந்த
அறியாது அபகரித்த மாதவிடாய்க் கறை படிந்த துணி// //புணரும் தருணத்தில் நிழலாடும் பிரசவ வலி////நேசிக்கப்படுகிறேன்மூடநம்பிக்கை//
//அந்த நெடுநேர உரையாடல் முடியும் சுயபோகத்தில் //உச்சக்குரலில்
ஒருநாள் உன்னத்தான் கட்டிக்குவேன்னு நிக்கப்போறா விஷம் கக்கினாள் சண்டாளி பொறம்போக்கு பீத்தின்னப்போகுது பார் புத்தி உங்கப்பன்கிட்ட நீ அப்படித்தான் கேட்டயா////எரிந்த பாம்புக்குளிகையின் திக்கில்லாமல் காற்றிலலையும் சாம்பலாய்//உனக்காக சுவாசித்தே உயிர்நீத்த
சிகரெட்////அப்பா அம்மாவின் புருஷன் இத்துனை காலமாய் இதுகூட
தெரியாமலிருந்திருக்கிறது.//உங்க முடி அழகா இருக்குங்க என்றதற்கு
போடா மயிரு செருப்பு பிஞ்சிரும்//

பிறகந்த பேருந்துக்கவிதை.....

கட்டத் துவங்கின வீட்டின் முத்தம் ,கழிவறை முதல் முறை........

நண்பா..!
இந்த வரிகளுக்கிடை உதிர்ந்த சிகரேட்டுத்துண்டுகள்
கசங்கிய திசுக்கோப்பைகள், சுய போகம் ,புணர்ச்சி
அலைவுறும் பயணம் , தனிமையின் வாதை , வாசிப்பு
தமிழுக்கு மாறாத பளோககேரின் எழுத்துக்கள் போல அச்சுக்கு வராமல் அடிக்கப்பட்ட வரிகள் எல்லாம் நிழல் ஆடுகின்றன யாத்ரா..!

இந்த விருதுப் பகிர்வு குறித்த பதிவில் சில வரிகள்
உங்களுக்கானவை யாத்ரா
எனது ஈமெயில் முகவரி nesamithranonline@gmail.com
உங்கள் விருப்பப் படி pop up window
வழியே கருத்துரைக்க மாற்றங்கள் செய்து விட்டேன்
இனிய நண்பனே !
நன்றி !

காயத்ரி

பதிவுலகை மறந்து விட்டார் என்ற நினைப்பில் தான் அவருக்கு நான் விருது கொடுக்க வில்லை இல்லையெனில் என் முதல் விருது அவருக்குகாகத்தான் இருந்திருக்கும் . எத்தனை அற்புதமான படைப்பாளி !
தயவு செய்து உங்கள் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வாருங்கள் காயத்ரி
எழுத மாட்டார்களா என்று காத்திருக்கும் படைப்பாளிகளுள் நீங்கள் முக்கியமானவர் .

உங்கள் விருதுப்பட்டியல் இந்த நிமிஷம் உங்களை ஆரத்தழுவி
இவ்வளவு அணுக்கமாய் இருக்கிறாய் நண்பனே என் ரசனைகளோடு என்று சொல்லத்தோன்றுகிறது
மிக்க நன்றி சேரல் !

ny said...

தங்கள் அன்பின் முன் செயலிழந்தவனாகிறேன்!
நேசமித்ரனைத் தொடர்ந்து இங்கும் நான் பெரிதும் விரும்பும் பதிவர்களாய் இருக்கக் கண்டு பேருவகை அடைகிறேன்!!
நன்றி என்பதை மட்டுமே எழுத முடிகிறது :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மிக்க நன்றி பிரேம்!

யாத்ரா, raaja chandrasekar, மண்குதிரை, வெங்கிராஜா, kartin,

வேறென்ன சொல்ல? வாழ்த்துகளும் நன்றியும்.

நன்றி ஜமால்

நன்றி Vidhoosh

@காயத்ரி,
விரைவில் மீண்டும் வாருங்கள் தோழி.

நன்றி நேசமித்ரன்

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் said...

உங்களின் நன்றியும், விருப்பமும் எனக்கும் நெருக்கமாய் இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி முத்துவேல்

-ப்ரியமுடன்
சேரல்