தொடர் பதிவுக்கு இதுவரை யாரும் என்னை அழைத்ததில்லை. என்னையும் நம்ம்ம்ம்பி ஒருவர் அழைத்திருக்கிறார். நண்பர் ஜெனோவாவுக்கு நன்றி.
இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
இனி பட்டியல்....
1.
பிடித்த தலைவர்கள் : காமராஜர், பெரியார், தோழர் ஜீவா
பிடிக்காத தலைவர்கள் : ராஜாஜி (இவரையும் பிடிக்கும். சில சம்பவங்களால் பிடிக்காது. இப்போதிருப்பவர்களைத் தலைவர்களாகவே நினைக்க முடியவில்லை)
2.
பிடித்த எழுத்தாளர்கள் : எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, கி.ராஜநாராயணன்
பிடிக்காத எழுத்தாளர்கள் : அப்படி யாரும் பெரிதாக இல்லை ;)
3.
பிடித்த கவிஞர்கள் : கல்யாண்ஜி, யுவன், வைரமுத்து
பிடிக்காத கவிஞர்கள் : தபு சங்கர் (காதலை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க சார்)
4.
பிடித்த இயக்குனர்கள் : மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, மணி ரத்னம், பாலா, தங்கர் பச்சான், சேரன், S.P.ஜனநாதன், மிஷ்கின், கமலஹாசன், சசி.... பெரிய பட்டியலாச்சே.....
பிடிக்காத இயக்குனர்கள் : S.P.முத்துராமன், பேரரசு, ராம.நாராயணன், A.வெங்கடேஷ்.... இதுவும் பெரிய பட்டியலாச்சே.....
5.
பிடித்த இசையமைப்பாளர்கள் : இளையராஜா, M.S.விஸ்வநாதன், A.R.ரஹ்மான்
பிடிக்காத இசையமைப்பாளர்கள் : ஸ்ரீகாந்த் தேவா, தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி
6.
பிடித்த நடிகர்கள் : கமலஹாசன், நாகேஷ், மனோரமா
பிடிக்காத நடிகர்கள் : இப்பொழுது புதிதாக ஆட்டமாடும் தமிழ்நாட்டு சூப்பர் மேன்கள், காசுக்கேற்றாற்போல் உடையைக் கூட்டிக் குறைத்து, சமூக சேவை செய்பவர்கள்.
7.
பிடித்த பாடகர்கள் : M.S.சுப்புலட்சுமி, S.P.பாலசுப்ரமணியம்(இவரு மனவாடு ஆயிட்டாரு ;) ), P.B.ஸ்ரீநிவாஸ், சித்ரா, ஜேசுதாஸ், ஜானகி (இவங்க யாருமே தமிழ்நாட்டுக்காரங்க இல்லையே...ஆனாலும் பரவாயில்லை)
பிடிக்காத பாடகர்கள் : தமிழ்நாட்டுக் காரர்கள் யாரும் இல்லை. வேறு மொழியில் இருப்பவர்களும், தமிழில் பாடியது மட்டுமே பிடிக்காமல் போயிருக்கிறது (உதாரணம் - உதித் நாராயணன், அத்னான் சாமி.....இப்படி)
8.
பிடித்த பேச்சாளர்கள் : நெல்லை கண்ணன், சத்தியசீலன்
பிடிக்காத பேச்சாளர்கள் : சாலமன் பாப்பையா (தற்போது), லியோனி(தற்போது)
(அப்பாடி...எப்படியோ எட்டு கேள்வி தயார் பண்ணியாச்சு ;))
அழைக்கும் பதிவர்கள் :
Bee'morgan
ச.முத்துவேல்
கிருஷ்ணபிரபு
-ப்ரியமுடன்
சேரல்
4 comments:
//தமிழ்நாட்டுக் காரர்கள் யாரும் இல்லை. வேறு மொழியில் இருப்பவர்களும், தமிழில் பாடியது மட்டுமே பிடிக்காமல் போயிருக்கிறது (உதாரணம் - உதித் நாராயணன், அத்னான் சாமி.....இப்படி)--//
சரிதான்...
பிடித்தவர்கள் லிஸ்ட் பிடித்திருக்கிறது....
விரும்பி அழைத்தமைக்கு நன்றி சேரல். சீக்கிரமே பதிவிடுகிறேன்.
நம்பி அழைத்தது வீண்போகவில்லை ;-))
தேர்ந்தெடுத்தப் பிடித்தங்கள் நண்பரே !
சாலமன் பாப்பையா ஏன் பிடிக்காமல் போனார் ?
அழைப்பை ஏற்று ( என்னையும் மனுசனா மதிச்சு ) பிடித்தங்களையும், ..காதவைகளையும் பதிவிட்டதற்கு நன்றி சேரல் !!
பதிவில் உங்கள் ரசனை தெரிகிறது.நல்ல தேர்வுகள்.
Post a Comment