புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, May 11, 2010

புணர்ச்சி

வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மௌனமாகிக் கொண்டோம்

உதிர்ந்த வார்த்தைகள்
அந்தரத்தில் மோதிக்கொண்டன

சண்டையிட்டன

சமாதானம் கண்டன

கட்டித் தழுவின

புணர்ந்து களைத்தன

யாவும் பார்த்திருந்தபின்
புன்னகைத்துக்கொண்டே
ஆயத்தமானோம்
அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...

9 comments:

VELU.G said...

//அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...
//
continue again

நல்லாயிருக்குங்க

நேசமித்ரன் said...

இறுதி வரிகளில் மீண்டும் துவஙுகிறது கவிதை

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சேரல்.

வழிப்போக்கன் said...

Nice

Nundhaa said...

அருமை சேரல்

ஆறுமுகம் முருகேசன் said...

யாவும் பார்த்திருந்தபின்
புன்னகைத்துக்கொண்டே
ஆயத்தமானோம்
அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...//

அடடா :)

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக நல்ல கவிதை, பாராட்டுக்கள்

க.பாலாசி said...

அருமைங்க சேரல்....

மதுரைக்காரன் said...

Thala,

varthigal vilaiyaduthu ponga