புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, August 02, 2010

கவிதையோடு வாழ்தல்

பேனா எடுத்து வா
என்றவனிடம்
தேடிக்கொண்டிருப்பதாய்ச் சொல்கிறாள்

காத்துக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே
கவிதையும்

எழுதி வைக்கும் வரை
மறந்துபோகாமலிருக்கும்
கவிதையைப் படைப்பது பாக்கியம்

இன்னொரு சிந்தனை
இடையூறாமலிருப்பதும் உத்தமம்

என்ன செய்தும்,
இன்னும் வாய்க்கவில்லை
இடைப்பட்ட நொடிகளில்
கவிதையோடு வாழ்தல்

10 comments:

MaYa said...

உங்கள் கவிதை தான் பேனாவை தேடிக்கொண்டிருக்கிறதே..!
இடைப்பட்ட நொடிகளில் காத்திருக்க மட்டும் தான் முடியும் :-) ..!

வானவில் மனிதன் said...

இடைப் பட்ட நொடியில் கவிதையோடு வாழ்தல்.... சுகமான சிந்தனை.வாழ்த்துக்கள்

மோகன்ஜி,ஹைதராபாத்

Vidhoosh said...

சேரல்: ஏன் நீங்களே எழுந்து பொய் எடுத்துக்க மாட்டீங்களா.

Unknown said...

ஆஹா :)))

ஆதவா said...

ரொம்ப அருமையா இருக்கு சேரல். அதனுடன் வாழ்தல் என்பது மரணத்திற்கு இணையானது!!

அன்புடன்
ஆதவா

Karthik said...

:)

bhupesh said...

தேடுவது பேனாவையா, இல்லைக் கவிதையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சேரலையா?

Geetha said...

இடைப்பட்ட நொடிகளில்
கவிதையோடு வாழ்தல்....

:)

மதுரைக்காரன் said...

Nice :-)

Anonymous said...

superp