சுதந்திர தேவி சிலையின்
உயரம் மீண்டுமொருமுறை அளந்தான்
நயாகராவின் துளிகளில் ஒன்றை
கையில் வைத்தலைந்த கதை சொன்னான்
இரவு நடன விடுதியில்
உடன் மதுவருந்தி
முயங்கிக் கிடந்து சென்ற
வெள்ளைக்காரப் பெண்ணின்
உடல் வாசம் சொன்னான்
டிஸ்னி உலகின்
பொம்மை மனிதர்களுடன்
பிடித்துக்கொண்ட
புகைப்படம் கொடுத்தான்
உயிர்த்தளம் குளிரும்
மைனஸ் டிகிரியின்
நீளம் தெரிவித்தான்
சொர்க்கவாசல் எப்போதும்
திறந்தேயிருக்கிறது உனக்கும்
என்றான் நண்பன்
மீண்டும் நுழையுமுன்
எனக்கென்னவோ
அவன் பத்தாம் வகுப்பில்
என்னைவிடக் குறைவாய்
மதிப்பெண் எடுத்ததே
அடிக்கடி நினைவில் வந்துபோனது
10 comments:
This is really nice.....the feeling of a common man like me......
அசத்தல்.
same blood!
ரொம்ப நல்லாயிருக்குங்க சேரல்...
Good one...
எட்டயபுரம் பற்றியும், பழவேற்காடு பற்றியும் கூறியிருப்பாய்
அருமையா இருக்கு..
ஏன் பிளாக்கர் தீமை மாத்திடீங்க..
கருப்ப வெள்ளைளையும் , வெள்ளைய கருப்புளையும்
"கருப்பு வெள்ளை" -ன்னு நீங்க எழுதி இருந்தது பார்க்கவே ஒரு கவிதை மாதிரி அழாக இருந்தது.
கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!
அன்பிற்கினிய கமலேஷ்,
நன்றி! அது எனக்கும் பிடித்தே இருந்தது. ஒரு மாற்றம் தேவைப்பட்டதால் அதை நீக்கிவிட்டேன். மீண்டும் அதேபோல் மாற்ற வாய்ப்பு வரும்போது மாற்றுகிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
very very intresting sera
Post a Comment