பேருந்து, ரயில் நிலையங்களில்
தூக்கில் தொங்கி,
சில்லறைத் தேவைக்காகவோ,
புழுக்கம் போக காற்று விசிறவோ,
கூட்டமான பேருந்தில் இடம் பிடிக்கவோ,
வாங்கப்பட்டு,
எடைக்குப் போடப்பட்டு,
வெல்லம், பருப்பு மடிக்க
என்று
பல வழிகளில்
வெகு ஜனங்களால்
பயன்படுத்தப்படுவனவற்றிற்கு
வெகு ஜனப் பத்திரிக்கை
என்று பெயர்.
9 comments:
ஹாஹா.. :) அருமையான சொல்லாடல்.. ரசிக்கவைக்கும் மெல்லிய இழையாய் அந்த எள்ளல் சிறப்பு..
எள்ளல் வழிகின்றது...!
நல்லா சிந்திச்சிருக்கீங்க
வாசிக்க... ரசிக்க... சிரிக்க... உணர்க..
நல்லாருக்குங்க கவிதை
எப்போதும் போல .. கலக்கல்!!!! :)
இந்த எளிய நடைக்கு முன்பு ஒரு முறை நடை போட்டு வந்ததாக நினைவு.
ஆ!ஞாபகம் வந்துருச்சு.அழகெனப்படுவது.
நல்லா இருக்கு சேரல்.
நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
சேரல்,
என்ன ஒரு எள்ளல்! கலக்கல். எனக்குப் புன்முறுவலுடன் பலமுறை படிக்கத் தோன்றியது.
அனுஜன்யா
நன்றி யாத்ரா!
நன்றி அனுஜன்யா!
எள்ளல், பத்திரிகைகள் மீதானதும், வாசிப்பவர்கள் மீதானதும்.
-ப்ரியமுடன்
சேரல்
இப்படியும் ஒரு காரணமா!
Post a Comment