விழுந்து புரண்டு சிரிக்கிறது
கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது
தூந்திர நிமிஷங்களை
மறந்துவிட்டு
உருகியுருகிச் சிரித்தோடுகிறது
பேரிரைச்சலோடு எழுவதும்
பெருமைகள் அற்று விழுவதும்
இயல்பே எனச்சொல்லி
பெருங்கூச்சலிடுகிறது கடல்
-கடலோடு சிரிப்பவன்
19 comments:
தலைப்பு வேறு இருந்து இருந்தால் இன்னும் இரசித்து இருக்கலாம.
[[பேரிரைச்சலோடு எழுவதும்
பெருமைகள் அற்று விழுவதும்
இயல்பே எனச்சொல்லி
பெருங்கூச்சலிடுகிறது கடல்]]
மிக அருமை.
//கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது //
கவிதை நல்லாருக்கு.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
சேரல்,
கவிதை நன்றாக இருக்கிறது.
‘தூந்திர‘ என்ற வார்த்தையின் பொருள் என்ன..
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றி ஜமால்
நன்றி பிரவின்ஸ்கா
நன்றி அகநாழிகை
தூந்திரம் எனும் சொல், துருவப்பகுதிகளைக் குறிக்கும்.
-ப்ரியமுடன்
சேரல்
அழகு....
நான் கேட்க நினைத்ததை வாசு சார் கேட்டு தெளிவடைய வைத்து விட்டார்...
ரொம்ப அழகா எழுதுறீங்க சேரல். வாழ்த்துக்கள். :)
--வித்யா
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்!
beautiful one!
i'll go with jamal.. a title without revealin 'sea' would hv bn gud either!!
ஜமால் மற்றும் கார்த்தி,
உங்கள் கருத்து மிகச்சரி. ஏற்றுக்கொள்கிறேன். தலைப்பை மாற்றிவிடுகிறேன். நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
கடல் காட்சி நன்றாக இருக்கிறது சேரல்
சொல்ல நினைத்தது, கேட்க நினைத்தது எல்லாம் எனக்கு முன்னமேயே முடித்துவிட்டார்கள்.மீண்டும்..
நல்லாருக்கு.
நல்லா இருக்கு சேரல்.
நன்றி தமிழ்ப்பறவை
நன்றி Vidhoosh
நன்றி மதன்
நன்றி Nundhaa
நன்றி முத்துவேல்
நன்றி யாத்ரா
-ப்ரியமுடன்
சேரல்
நல்லாயிருக்கு சேரல்
:)))
அருமை...
//கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது //
மிக அருமையான உருவகம் !
நன்றி மண்குதிரை
நன்றி நளன்,
தொடர்ந்து வாருங்கள்
நன்றி கோகுல்
நன்றி கதிரவன்,
தொடர்ந்து வாருங்கள்
-ப்ரியமுடன்
சேரல்
//கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது//
அழகா சொன்னீங்க சேரல்.
Post a Comment