மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்
மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்
முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை
வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை
இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்
12 comments:
Dear Sera,
This is really great.....
Rgds,
Murali
நல்லாருக்கு சேரல்
nice nanba
சேரல்
மிக நுண்ணிய பாகமுள்ள மனசின் அறைகளில் அம்மாவின் ஒரு பழைய நூல் புடவை வாசனையை பரப்புகிறது இந்தக் கவிதை தரும் கூட்டுணர்வு
நல்லா இருக்கு சேரல்.
அனுஜன்யா
great ... cool ... rain is a wonder as is this poem ... wow cheral
நல்லாயிருக்குங்க கவிதை.
என்னால சொல்ல முடியலை, நேசமித்ரன் சொல்லிட்டாரு...
பிடித்திருந்தது...
கடைசியா நீ எழுதிய ரெண்டு கவிதைகளும் சரியில்லை. (நீ சொல்லும் படி சொல்லனும்னா கமர்ஷியல்...) எதோ ஒரு அவசரகதியில எழுதி இருக்க போல...
ரொம்ப நல்லா இருக்கு சேரல்
நல்லாயிருக்கு.
கருத்துகளுக்கு நன்றி நட்பே!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment