புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, December 11, 2009

பிழை திருத்தம்

செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு

எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்

மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்

14 comments:

அனுஜன்யா said...

நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

♠ ராஜு ♠ said...

க்ளாசிக்..!

க.பாலாசி said...

//செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்//

very nice

மண்குதிரை said...

nice cheral

Gowripriya said...

arumai seral...

RaGhaV said...

கவிதை நல்லாயிருக்கு சேரல்.. :-))

நேசமித்ரன் said...

பிடிச்சிருக்கு சேரல்

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

kartin said...

:)Qte !

J.S.ஞானசேகர் said...

கோலமும் பொய்களோ?

பூங்குன்றன்.வே said...

//மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்//

மழை மூலம் அந்த தெருவோர ஓவியனின் வழியை மிக அழகா சொல்லியிருப்பது மனதை தொட்டது ஸார்.

" உழவன் " " Uzhavan " said...

நல்லாருக்கு சேரல்

கமலேஷ் said...

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

வெகு அருமை...

Nundhaa said...

அருமை அருமை அருமை