புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, May 13, 2010

படிந்த வரிகள் - 13

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்

- கல்யாண்ஜி


மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.

காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.

அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.

ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?

7 comments:

VELU.G said...

கல்யாண்ஜீயின் வரிகளில் எப்போதுமே ஒரு அழுத்தம் இருக்கும். நினைவூட்டலுக்கு நன்றி

Unknown said...

நல்ல பதிவு..
நன்றி..

நேசமித்ரன் said...

சேரல் ...

இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம்

:)

க.பாலாசி said...

சிலநாட்களாகவே அந்த ஓரக்கவிதை என்னை ஆக்கிரமித்திருந்தது... சிறந்த பகிர்வு...

பா.ராஜாராம் said...

//சேரல் ...

இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம்//

yes! athe :-)

Dharini said...

very true! :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

உண்மைதான் வேலு. மிகப்பெரிய விஷயங்களை மிக எளிமையாகச் சொல்லிவிடுவார். அது அவரின் சிறப்பு :)

நன்றி ஆறுமுகம் முருகேசன்

அன்பின் நேசமித்திரன், அன்பின் பா.ரா,
வழக்கமாக எனக்குப் பிடித்த கவிதை வரிகளை அப்படியே பதிவிட்டு வந்தேன். இந்தப் பதிவில்தான், வரிகளோடு, அவை என்னுள் தோற்றுவித்த வார்த்தைத் தொகுப்புகளையும் வெளியிட வேண்டுமெனத் தோன்றியது. அதன் விளைவே இப்பதிவு. இனி வரும் நாட்களில் இன்னும் நிறைய பேசுகிறேன் :) நன்றி!

நன்றி பாலாசி

நன்றி தாரிணி

-ப்ரியமுடன்
சேரல்