புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, April 08, 2009

இரு பட்டாம்பூச்சிகள்

புன்னகை கீழே விழுந்துவிடாமல்
துரத்திக்கொண்டிருந்தாள்
மேலாடை இல்லாத சிறுமி

வரையறுக்கப்பட்ட
வழிகளின்றி
ஒழுங்கற்று
அங்குமிங்குமாய்த் தாவி
அலைக்கழித்தது
சிறிய இறக்கைகளைக்கொண்ட
பட்டாம்பூச்சியொன்று

கொஞ்சமாயும்,
அதிகமாயும்
மாறி மாறித் தோன்றிய
இடைவெளியில்
ஒளிந்திருந்தன,
குழந்தைமையின் சூட்சுமமும்,
சந்தோஷப்படுத்தலின் ரகசியமும்.

19 comments:

ஆ.சுதா said...

//இரு பட்டாம்பூச்சிகள்//

தலைப்பே ஒரு வரிக் கவிதை.

//புன்னகை கீழே விழுந்துவிடாமல்
துரத்திக்கொண்டிருந்தாள்
மேலாடை இல்லாத சிறுமி//

நல்ல ரசனை

//கொஞ்சமாயும்,
அதிகமாயும்
மாறி மாறித் தோன்றிய
இடைவெளியில்
ஒளிந்திருந்தன,
குழந்தைமையின் சூட்சுமமும்,
சந்தோஷப்படுத்தலின் ரகசியமும். //

அருமையா எழுதியிருக்கீங்க
அழகான கவிதை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

Karthikeyan G said...

Fine Sir!!

உங்கள் பெயர் இனிமையாக உள்ளது. :)

யாத்ரா said...

சிறுமி பட்டாம்பூச்சி, அருமையான கவிதை,

உயிரோசையில் தங்கள் கவிதைகள் வாசித்தேன் இரவு, ஓடல் இரண்டுமே அருமையான கவிதைகள். வாழ்த்துகள்

Vilva said...

அருமை..!
வார்த்தை பயன்படுத்தல், நடை, கரு அத்தனையிலும் நல்ல முன்னேற்றம்.
சேரா..!
ஒரு முதிர்ந்த கவி உருவாகிக் கொண்டிருக்கிறான்..!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Karthikeyan G
நன்றி நண்பரே :)

@yathra
நன்றி!
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

@Vilva
நன்றி நண்பா!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

ஏற்கனவே உயிரோசையில் வாசித்திருந்தேன். சேரல் என்ற பெயரில் இல்லாததால் குழம்பிவிட்டேன். இரவு பற்றிய கவிதையை ரசித்தேன்.

மேலும், இந்த கவிதையில்


//கொஞ்சமாயும்,(கொஞசமாகவும்,)
அதிகமாயும், (அதிகமாகவும்,)
மாறி மாறித் தோன்றிய
இடைவெளியில்
ஒளிந்திருந்தன,
குழந்தைமையின் சூட்சுமமும்,
சந்தோஷப்படுத்தலின் ரகசியமும்//

கவிதையை ரசித்தேன்.

நந்தாகுமாரன் said...

ஒரு காட்சித் தொகுப்பை மொழியாக்கும் போது கவிதையைத் தொலைக்காமல் (Lost In Translation - என்பது போல) அழகாகக் கடத்தியிருக்கிறீர்கள்.

anujanya said...

மனதை இலேசாக்கி புன்னகைக்க வைக்கும் கவிதை. நல்லா இருக்கு சேரல்.

உயிரோசைக் கவிதைகள் இரண்டும் நன்று.

"இரவினை
ஒரு குடிகாரனின் வேகத்தில்
ஒரே மடக்கில்
வாரிக் குடித்து விடுகிறது
தூக்கம்"

விழித்திருப்பவனின் இரவு - நல்ல கவிதை. (இத்தலைப்பில் எஸ்ராவின் புத்தகம் படித்து இருக்கிறீர்களா?)

அனுஜன்யா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@மண்குதிரை
நன்றி!

@Nundhaa
நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அனுஜன்யா!

'விழித்திருப்பவனின் இரவு' புத்தகம் இன்னும் படிக்கவில்லை. எஸ்ராவின் மற்ற புத்தகங்களைப் படித்ததுண்டு.

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

றெக்கை முளைத்து காற்றில் மிதந்து கொண்டே இருக்கிறேன் .
கவிதையை வாசித்த கணம்.
மூன்று பட்டாம்பூச்சிகள் என்று வைத்துக் கொள்வோமா .
கவிதை வசிப்பவர்களை சிறுமியுடனும் , பட்டம்பூச்சியுடனும்
சந்தோஷத்தில் பறக்கச் செய்கிறது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரவின்ஸ்கா!

உங்கள் பின்னூட்டமே கவிதை படித்து புல்வெளியில் படுத்துறங்கிய ஒரு மாலைப்பொழுதின் சுகத்தைத் தருகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

அருமையான கவிதை..வாழ்த்துகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம் தோழரே...
///குழந்தைமையின் சூட்சுமமும்,
சந்தோஷப்படுத்தலின் ரகசியமும். ///

அருமையான வரிகள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

சந்தனமுல்லை said...

அருமையான கவிதை..ரசித்தேன்!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@சந்தனமுல்லை

நன்றி!
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்