புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, September 01, 2009

'உயிர்மை' மற்றும் 'வார்த்தை' இதழ்களில் என் கவிதைகள்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

என் படைப்புகள் 'உயிர்மை' மற்றும் 'வார்த்தை' இலக்கிய இதழ்களின் செப்டம்பர் 2009 மாதப் பதிப்பில் பிரசுரமாகி இருக்கின்றன.

உயிர்மையில் நான் எழுதிய 'விழித்திருப்பவனின் இரவு' கவிதை வெளியாகி இருக்கிறது. நீளம் கருதியோ, அல்லது வேறென்ன காரணத்தாலோ கவிதையின் பாதியை மட்டுமே பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

வார்த்தை இதழில் கீழுள்ள கவிதை வெளியாகியிருக்கிறது.


காற்றைச் சுமந்து அலைபவர்கள்

காற்றின் அடர்த்தி குறைந்த
வீதிகளில்
இறுக்கமான முகத்துடனே
அலைகிறார்கள்
பலூன் காரர்கள்

குழந்தைகள் சத்தம்
கேட்காத வீடுகளை
அறவே வெறுக்கிறார்கள்

குரங்காட்டிகள் வழிகாட்ட
திருவிழாக்கள்
தேடி நடந்தே அலைகிறார்கள்

அடிவயிற்றில் இருந்து
இழுத்துச் செலுத்திய
காற்றடைக்கப்பட்ட பலூன்கள்
எப்போதும் அவர்கள்
கைகளைவிட்டுப் பறந்தோடத்
தயாராய் இருக்கின்றன

பெண்ணின் மதர்த்த தனங்களையும்,
வீட்டுக் கூரைகளில் நெளியும் சுரையையும்
சீட்டுக்கட்டு காதல் சின்னங்களையும்
நினைவுறுத்துவதாய்
இருக்கின்றன அவை

பலூன் காரர்களின்
ஞாபகத்தில் இருப்பதே இல்லை
சிறுவயதில் தாங்கள்
பலூன்கள் வைத்து விளையாடியதான
நினைவுகள்

பலூன் பரப்பும்
ரப்பர் வாசத்தை
தாயின் வாசம் ருசிக்கும்
குழந்தையெனப்
பருகிறார்கள்

எடையற்ற காற்றைச்
சுமந்தபடி
போய்க்கொண்டே இருக்கிறார்கள்
பலூன்கள் குறித்த
கனவுகள் கண்டிருக்கும்
குழந்தைகளைத் தேடி...


-ப்ரியமுடன்
சேரல்

18 comments:

Vilva said...

தொடர்ந்து கலக்குங்கோ..!

RaGhaV said...

அருமையாக இருக்கிறது.. :-) வாழ்த்துக்கள் சேரல்.. :-)

Nundhaa said...

மிக்க மகிழ்ச்சி சேரல் ... வாழ்த்துகள்

Vidhoosh/விதூஷ் said...

வாழ்த்துக்கள்

--vidhya

பிரியமுடன்...வசந்த் said...

சந்தோஷ்ம் சேரல் வாழ்த்துக்கள்

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் சேரல்....
”காற்றைச் சுமந்து அலைபவர்கள்” மிக அழகு மற்றும் அடர்த்தி...

Krishna Prabhu said...

சென்ற வாரத்தில் உன்னுடைய கவிதை ஆ.வியில் வந்த போது தீவிர இலக்கிய இதழ்களில் முயற்ச்சி செய் என்றேன். அது நடந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.

அடுத்து கவிதைப் புத்தகம் வெளியிட முயற்சி செய். வாழ்த்துக்கள் சேரலாதா...

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.

மண்குதிரை said...

manal veedu, a v, uyirmai, varththai

ithu ungkal varama nanba
kalakkungka vaazhththukkal

ராஜா சந்திரசேகர் said...

காற்றை சுமப்பவனின் பாரம் கவிதையில்
இறக்கப்பட்டிருக்கிறது,வசீகரத்துடன்...

velkannan said...

சேரலுக்கு வாழ்த்துக்கள்

யாத்ரா said...

மிக்க மகிழ்ச்சி சேரல், வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

இவ்வளவும் நான் எழுத முடியாமல் போச்சே சேரல்.
கொஞ்சநேரம் நீங்களா இருக்கட்டுமா நான்?
அன்புடா சேரல்...(கண்டுக்காதீங்க,..சந்தோசம் வந்துட்டால் கிறுக்கன் நான்.)

" உழவன் " " Uzhavan " said...

அருமை சேரல்.. வாழ்த்துக்கள்!

சேரல் said...

நன்றி Vilva!

நன்றி Raghav!

நன்றி Nundhaa!

நன்றி Vidhoosh!

நன்றி பிரியமுடன்...வசந்த்!

மிக்க நன்றி தமிழ்ப்பறவை!

நன்றி கிருஷ்ணா! பார்க்கலாம்....படிகள் பல கடக்கவேண்டியிருக்கிறது. முதல் படியிலேயே கோபுர தரிசனமா?

@மண்குதிரை,
நன்றி நண்பா!

நன்றி ராஜா சந்திரசேகர்!

நன்றி velkannan!

நன்றி யாத்ரா!

அன்புக்கு நன்றி பா.ராஜாராம்!
உங்கள் எழுத்துகளைப் பார்த்து நான் இதே உணர்வு பெறுவதும் நடக்கிறது :)


நன்றி உழவன்!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமை .

வாழ்த்துக்கள்

- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா

Murali said...

Sirandha Kavidhai en sirandha nanbanidamirundhu

Un Thozhan
Murali

RamG said...

கடைசி வரிகள் அருமை

சேரல் said...

கருத்துகளுக்கு நன்றி நட்பே!

-ப்ரியமுடன்
சேரல்