உடல் சதையை
வியர்வையில் கரைப்பவனுக்கு
ஓடுகளம்
வாகன இரைச்சலுக்கிடையிலும்
நெற்றிப்பொட்டில்
தீபமேற்றும் வித்தைக்காரனுக்கு
தியானபீடம்
முதல் போனியின்
சாத்தியம் தேடித் திரியும்
தேநீர்க்காரனுக்குப்
பிழைக்குமிடம்
வெளிச்சத்தின்
இருப்பையும்,
இருட்டையும்
ரசிக்கும் யாத்ரீகனுக்குச்
சொர்க்க பூமி
அமாவாசை
அதிகாலை
பித்ருக்களுக்குப்
பிண்டம் வைப்பவனுக்குப்
புனிதத்தலம்
என்றெலாமானது,
அவசரமாகவெழும்
சூரியனைச் சபித்தபடி
உள்ளாடை நீக்கி
உட்காருபவனுக்குக்
கழிப்பிடமுமாகிறது
சரிதான்
குந்தக்கூட இடமில்லாதவனுக்குக்
கடற்கரையாவது?
கருவறையாவது?
10 comments:
anbin seral, arumaiyana varikal.. rasitthen ;-)
//குந்தக்கூட இடமில்லாதவனுக்குக்
கடற்கரையாவது?
கருவறையாவது? // Beautiful lines
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
அருமை...
//என்றெலாமானது,
அவசரமாகவெழும்
சூரியனைச் சபித்தபடி
உள்ளாடை நீக்கி
உட்காருபவனுக்குக்
கழிப்பிடமுமாகிறது//
உண்மையான வரிகள் அழுத்தமாகவும்...
நல்ல கவிதை அன்பரே....
அருமை
நல்ல கவிதை
:)
ஸ்டீரியோ டைப்... மாதிரி?
hmmm :)
நல்லா இருக்கு சேரல்.
உள்வாங்கி எழுதியிருக்கிங்க
நல்ல இருக்கு சேரல்
வேல்கண்ணன்
கருத்துகளுக்கு நன்றி நட்பே!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment