புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 14, 2005

மழைக்காலத்து இரவுகளும், அவளும்

சீரான
மழையினூடே
அவளின்
அபிநயங்களை
ரசிக்கிறேன்...!

அடிக்கடி
அனிச்சையாய்
என்னை
அர்ச்சிக்கின்றன
அவள் உதடுகள்...!

வெள்ளைக்கொடியோடு
களம்
காண்கிறேன் நான்....!

சமாதானத்தின்
பல பரிமாணங்களை
அரங்கேற்றுகிறேன்....

கூடலில் உதடுகளும்,
ஊடலில் கண்களும்தான்
போர் வீரர்கள்...!
சில நேரங்களில்
கைகளும்தான்....!

எதற்கோ
எழுந்த கை,
அவளை
எங்கோ தீண்ட....

கோபமாய் எழுகிறாள்...
நடக்கிறாள்....

'மன்னிக்க மாட்டேன்' என்கிறாள்

'மறந்து விடு' என்கிறாள்

'இந்த மழை நாளே கடைசி'
என்றபடி விலகிப் போகிறாள்....

மழைக்கால நாட்கள்
வந்து வந்து போகின்றன....!!

4 comments:

ச.பிரேம்குமார் said...

சேரல் கிட்டயிருந்து காதல் கவிதையா? நல்லா இருக்கு.

ச.பிரேம்குமார் said...

2005ல் இருந்து பதிவுலகில் இருக்கிறாயா அல்லது இது 2005ல் எழுதி இப்போது பதித்த கவிதையா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

2005லிருந்து வலையுலகத்தில் இருக்கிறேன். இது 2004இல் எழுதி என் கல்லூரி ஆண்டு மலரில் வெளியான கவிதை :)

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

2005ல் இருந்து இயங்குகிறாயா? நான் 2009ல் தான் பார்த்தேன்... என்ன கொடும சேரல் இது :-)