புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, August 13, 2009

சுயம்

யாரும் பார்க்காத பொழுதொன்றில்
எல்லோரும் பார்க்க
பருத்த உடல் தூக்கி
ஓட்டமும் நடையுமாய்க்
கீழே குனிந்தபடி
மூச்சிறைக்க ஓடி வந்தும்
பேருந்தைத் தவற விட்டிருந்தாள்
ஒரு பெண்

எந்தச் சலனமும் அற்று
தத்தம் வழிதொடர்ந்தனர்
சுற்றி இருப்போர்

தன் சுயத்துக்குப்
பேரழிவு நிகழ்ந்ததெனச்
சூன்யத்தைச் சுமந்தபடி
இடம் விட்டகல எத்தனிக்கிறாள் அவள்

இன்றிரவு அவள்
தாமதமாகத் தூங்கக்கூடும்

15 comments:

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

Vidhoosh said...

:(.. paavam illa...
nalla kavanippu, nalla kavithai

vidhya

na.jothi said...

நல்லா இருக்குங்க

thamizhparavai said...

நல்ல பதிவு சேரல்...

ny said...

அழகாய் சொல்ல முடிந்திருக்கிறது சுய வலைக்குள் சிக்கிக் கிடப்பதன் தவிப்பை!!

Vilva said...

ஆழம்..!

யாத்ரா said...

நல்ல கவிதை சேரல்.

Unknown said...

நல்லா இருக்கு.

நாடோடி இலக்கியன் said...

அருமை சேரல்.

Anonymous said...

rompa nalla irukku cheral

mankuthiray

ப்ரியமுடன் வசந்த் said...

excellent..

TKB காந்தி said...

ரொம்ப அழகா சொல்லியிருகீங்க!

நேசமித்ரன் said...

சேரல்.
நல்லா இருக்கு

நந்தாகுமாரன் said...

:)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நட்பே!

-ப்ரியமுடன்
சேரல்