புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, May 01, 2009

வெயில்

அழையா விருந்தாளியாக
வீட்டுக்குள் தினமும்
வந்து போகிறது
வெயில்

மேற்கு பார்த்த வீடு
எனது

காற்று
அடித்து வந்து சேர்த்த
புழுதியில்
பூனையின்
மெல்லிய பாதங்கள்
பொருத்தி
நடந்து வருகிறது

வெயில்,
வெப்பமா?
வெளிச்சமா?
இரண்டும் சேர்ந்ததா?
இருப்பதா?
இல்லாததா?
இல்லாதிருப்பதா?

தர்க்கங்கள் நடத்திப்
பொழுது போக்கும்
என்
ஆறிப்போன மாலைத்
தேநீர்ப்பொழுதையும்,
தேநீரையும்
சூடேற்றிக் கொடுத்துப்
போகிறது

கொஞ்சம் கொஞ்சமாய்
உட்புறம் நீண்டு............
பின்
காணாது போகிறது

இருள்
அடர்ந்து படர்ந்த பின்னும்
வீட்டின்
எல்லாப் பொருட்களின் மீதும்,
சூடு பரப்பிய
தன் பாதச் சுவடுகளால்
நீட்டித்துப் போகிறது
தன் இருப்பை.

17 comments:

பிரவின்ஸ்கா said...

கவிதை அருமையாக இருக்கிறது .

திரு. கழனியூரன் அவர்கள், உங்கள் எழு(த்)து கவிதை
நன்றாக இருக்கிறது என்றார் .

பிரியமுடன்,
பிரவின்ஸ்கா

சேரல் said...

நன்றி நண்பரே!

//திரு. கழனியூரன் அவர்கள், உங்கள் எழு(த்)து கவிதை
நன்றாக இருக்கிறது என்றார் .//

அது என் பாக்கியம். அவருக்கும் என் நன்றியைச் சொல்லுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

பிரேம்குமார் said...

//இருள்
அடர்ந்து படர்ந்த பின்னும்
வீட்டின்
எல்லாப் பொருட்களின் மீதும்,
சூடு பரப்பிய
தன் பாதச் சுவடுகளால்
நீட்டித்துப் போகிறது
தன் இருப்பை//

உங்கள் கவிதையின் தாக்கமும் அப்படியான ஒன்று தான் :)

yathra said...

நல்லா இருக்கு சேரல், ரசித்தேன்.

ஆ.முத்துராமலிங்கம் said...

எல்லாப் பொருட்களின் மீதும்,
சூடு பரப்பிய
தன் பாதச் சுவடுகளால்
நீட்டித்துப் போகிறது
தன் இருப்பை.//

நல்லா இருக்கு கவிதை,
ரசிக்க வைத்தது.

சேரல் said...

@பிரேம்குமார்
நன்றி நண்பரே!

நன்றி யாத்ரா!

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

தமிழ்ப்பறவை said...

//இருள்
அடர்ந்து படர்ந்த பின்னும்
வீட்டின்
எல்லாப் பொருட்களின் மீதும்,
சூடு பரப்பிய
தன் பாதச் சுவடுகளால்
நீட்டித்துப் போகிறது
தன் இருப்பை. //
படுக்கையில் எனது புலம்பல் இதுதான் . அழகுக் கவிதையாக்கி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் சேரல்.

இலக்குவண் said...

//தேநீரையும்
சூடேற்றிக் கொடுத்துப்
போகிறது//

அழகு

மண்குதிரை said...

நல்லா இருக்கு சேரல். நேற்றுதான் உங்கள் சிறுகதையை வாசிக்க முடிந்தது சேரல். மேலும் தொடர என் வாழ்த்துக்கள் சேரல்.

ஆகாய நதி said...

உங்கள் பின்னூட்டம் வழியாக ஒரு அருமையான கவிதைப் புத்தகத்தை கண்டெடுத்துவிட்டேன் :)

மிக்க நன்றி சேரல்... உங்கள் கவிதைக்கு...

சேரல் said...

@தமிழ்ப்பறவை
நன்றி நண்பரே!
தவிர்க்க முடியாத தவிப்பு அது. நானும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன்.

@இலக்குவண்
நன்றி தோழரே!

@மண்குதிரை
நன்றி நண்பரே!

@ஆகாய நதி
மிக்க நன்றி தோழி!

-ப்ரியமுடன்
சேரல்

டக்ளஸ்....... said...

வசந்தபாலனே தோத்துட்டாரே தல..!

சேரல் said...

என்ன ஒரு கலாய்? :)

வருகைக்கு நன்றி டக்ளஸ்

-ப்ரியமுடன்
சேரல்

அனுஜன்யா said...

வெய்யில் பற்றி மீண்டுமொரு கவிதை. நல்லா இருக்கு.

அனுஜன்யா

சேரல் said...

நன்றி அனுஜன்யா!

-ப்ரியமுடன்
சேரல்

இலக்குவண் said...

//இருள்
அடர்ந்து படர்ந்த பின்னும்
வீட்டின்
எல்லாப் பொருட்களின் மீதும்,
சூடு பரப்பிய
தன் பாதச் சுவடுகளால்
நீட்டித்துப் போகிறது
தன் இருப்பை//
அருமை.

சேரல் said...

நன்றி இலக்குவண்

-ப்ரியமுடன்
சேரல்