புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, May 28, 2009

தீ

தொடாதே சுடும்
என்றார்கள்

நானும் கடைசி வரை
தொட்டுப் பார்க்கவேயில்லை

இதுதான்
சுடுவதென்றால்
என்னவென்றே
எனக்குத்
தெரியாமல் போன கதை

8 comments:

நட்புடன் ஜமால் said...

மிக அருமை

எப்படி எல்லாமோ யோசிக்கிறீங்க‌

பிரவின்ஸ்கா said...

சேரல்,
ரொம்ப நல்லா இருக்கு .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஆ.முத்துராமலிங்கம் said...

அதெப்படி சின்ன சின்னதா
நல்லா யோசிக்கிரீங்க!
நல்லா இருக்குங்க

yathra said...

நல்ல கவிதை சேரல்.

Nundhaa said...

ம்ஹூம் ... இது கொஞ்சம் விளக்கம் தரப்பட்ட ஒரு statement மாதிரி தான் தெரிகிறது ... ஆனால் இதை நீங்கள் ஒரு நல்ல கவிதையாக உருமாற்றி இருக்க முடியும் ...

சேரல் said...

@நட்புடன் ஜமால்,
நன்றி நண்பரே!

நன்றி பிரவின்ஸ்கா,

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி நண்பரே!

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

களவும் கற்று மறக்கணும் அப்படீங்கிரியா சேரல் ? யதார்த்தமான கவிதை. வாழ்த்துக்கள்

சேரல் said...

நன்றி பிரேம். சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

-ப்ரியமுடன்
சேரல்