புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, May 11, 2009

அனுமானங்களின் பொழுதுகள்

குள்ளமாய்
பெரிதாய் மீசை வைத்து
கண்ணாடி அணிந்து
பேன்ட் மாட்டி
அரைக்கை சட்டையை வெளியே எடுத்து விட்டு
முன்புறம் சற்றே வழுக்கையாய்
சிகரெட் கறைபடிந்த உதடு பெற்று
ஆறு மாதப் பிள்ளைத்தாச்சி போல்
தொப்பை சுமந்து
காதுக்குள் பூனை முடி கொண்டு
கைகள் இரண்டையும் பின்னால் கட்டி
வார்த்தைகளுக்கு வலிக்காமல் பேசி
சத்தமில்லாமல் சிரித்து,
இப்படித்தான்
இருப்பார் என்று
எதிர்பார்த்தேன்
இதுவரை பார்த்திராத
நண்பனின் சித்தப்பா

வேறு மாதிரி இருந்தவரைப்
பார்த்தும்,
பேசாமல் திரும்பிவிட்டேன்

10 comments:

யாத்ரா said...

கவிதை நல்லா இருக்கு சேரல்.

பிரவின்ஸ்கா said...

கவிதை நன்றாக இருக்கிறது.

ச.பிரேம்குமார் said...

//வேறு மாதிரி இருந்தவரைப்
பார்த்தும்,
பேசாமல் திரும்பிவிட்டேன் //

எதிர்பார்ப்புகளால் நிறைந்த வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்

ச.பிரேம்குமார் said...

:)

anujanya said...

ம், சில சமயங்களில் உண்மைதான் :)

அனுஜன்யா

மண்குதிரை said...

வித்தியாசமா நல்லா இருக்கு இந்தக் கவிதை.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி யாத்ரா

நன்றி பிரவின்ஸ்கா

நன்றி பிரேம்
எதிர்பார்ப்புகள் அற்றுப் போனால் வாழ்க்கை சுவை அற்றுப்போகும். இது போன்ற ஏமாற்றங்கள் கசப்புச் சுவை. கசப்பும் ஒரு சுவை தானே!

நன்றி அனுஜன்யா

நன்றி மண்குதிரை

-ப்ரியமுடன்
சேரல்

thamizhparavai said...

//ம், சில சமயங்களில் உண்மைதான் :)//
ஒத்துக் கொள்ள மாட்டேன். பல சமயங்களில் உண்மைதான்.
சேரலுக்கு நான் வைத்திருக்கும் உருவம் எப்படிப் பொருந்தப் போகிறதோ... பொருந்தாவிடில் நான் பேசாமல் போய் விடுவேனோ என்னவோ..அனுமானங்களின் பொழுதுகள்தான் தீர்மானிக்கும்..
நல்ல யதார்த்தக் கவிதை சேரல்

ஆ.சுதா said...

வித்தியாசமா இருக்கு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@தமிழ்ப்பறவை
நீங்கள் சொல்வது போலவும் நடக்கலாம்.

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்