புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, May 27, 2009

துணி

கருப்பு
சிவப்பு
வெள்ளை
நீலம்
மஞ்சள்
பச்சை
என்று
வண்ணங்கள் கலந்தடித்துப்
பளபளக்கின்றன
கொடிகள்

என் வீட்டுக் கொடியில்
காய்கிறது
தாத்தாவின்
கிழிந்த கோவணம்

8 comments:

Abbasin Kirukkalkal said...

தாத்தாவுக்காக கவிதை எழுதனும்னு
தோணின உங்களுக்கு
புது கோவணம் வாங்கி கொடுக்கணும்னு
தோணிருக்கும்னு நினைக்குறேன்

பதில் புண்படுத்தவில்லைனு நம்புறேன்

நட்புடன் ஜமால் said...

அருமை வரிகள்

எதார்த்தத்தை

எதார்த்தமாக சொல்கின்றன‌

ச.முத்துவேல் said...

aahh! simply said & well said.

பிரவின்ஸ்கா said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

yathra said...

ஒரு பாதிப்பை ஏற்படுத்துது சேரல் இந்தக் கவிதை, நல்ல கவிதை நண்பா

சேரல் said...

@Abbasin Kirukkalkal
கொடி கிழித்தாவது கோவணம் செய்து தருவேன். அது நிச்சயம்! புண்படுத்த ஏதும் இல்லை நண்பரே!

@நட்புடன் ஜமால்
நன்றி நண்பரே!

நன்றி முத்துவேல்!

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

Nundhaa said...

//

வண்ணங்கள் கலந்தடித்துப்
பளபளக்கின்றன
கொடிகள்

என் வீட்டுக் கொடியில்
காய்கிறது
தாத்தாவின்
கிழிந்த கோவணம்

//

என்று மட்டும் வாசித்துக் கொண்டால் எனக்கும் பிடித்துப் போகிறது

ஆ.முத்துராமலிங்கம் said...

மிக எளிமையா இருந்தாலும் நல்லா இருக்குங்க சேரல்!