புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, May 15, 2009

நட்பு

தயக்கத்துடன் சொல்லி,
வெட்கத்துடன் கேட்டுக்கொள்கிறது
காதல்

சாதாரணமாகச் சொல்லி,
சாதாரணமாகவே கேட்டுப்
புன்னகைக்கிறது
நட்பு

'இன்று நீ
அழகாய் இருக்கிறாய்'
என்ற வார்த்தைகளை

11 comments:

bhupesh said...

அட! கவித்துவமான வேறுபாடு. இரண்டாம் பகுதி உண்மையென்று தெரியும். முதல் பகுதி உண்மையாகத்தானிருக்கும் :)

அனுஜன்யா said...

சேரல்,

ரொம்ப அழகான, கச்சிதமான வரிகள்.

அனுஜன்யா

Nundhaa said...

எளிமையான, அழகான கவிதை ...

மண்குதிரை said...

நல்லா இருக்கு சேரல்

ச.பிரேம்குமார் said...

காதலுக்கு எப்போவுமே கொஞ்சம் Exaggeration தேவைப்படுகிறது :)

Selva said...

அட அழகா இருக்கே!

பிரவின்ஸ்கா said...

நல்லா இருக்கு சேரல்

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

yathra said...

நல்லா இருக்கு சேரல்.

" உழவன் " " Uzhavan " said...

நட்புக்கான இலக்கணம் மிக அருமை.

நட்புடன் ஜமால் said...

மிக அருமையா சொல்லியிருக்கீங்க வித்தியாசத்தை

சேரல் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்