இக்கவிதை மணல் வீடு சிற்றிதழின் ஜூலை-ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது
வரிசையில் போவதில்லை
அடிக்கடி சண்டையிடுகின்றன
ஒரே இடத்தில்
வாழ்வதில்லை
மழைக்காலம்
அற்றுப் போனதிலிருந்து
சேமிக்கவும்
செய்வதில்லை
தனக்கென்று
தனிக்கூடு செய்வதில்
முனைப்பு கூடியது
இறகு முளைத்த
ஈசல்கள் பார்த்துப்
பொறாமை வேறு
மொத்தமாக
உருமாற்றம்
கொண்டுவிட்டன
நகருக்குள்
புலம் பெயர்ந்த எறும்புகள்
17 comments:
ஹா.. நுட்பமான குறியீடு சேரா.. மிக சாதாரணமாக, ஆனால் அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.
நல்லாயிருக்குங்க கவிதை.
ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை.
அனுஜன்யா
மனிதர்கள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் தங்களின் முன்னோர் 40,000 ௦பேர் இறந்தது போனதாக எறும்புகள் செல்வதாக வைரமுத்து எழுதினார்.
இப்போது மனிதர்கள் சாகிறார்கள்; செவ்வெறும்புகள் கடிக்க மட்டும் செய்கின்றன. கருப்பு எறும்புகள் திக்கு தெரியாமல் இன்னும் வரிசை தராமல்.
- ஞானசேகர்
யப்ப்பா ... அருமையான observation ...
நன்றாக இருக்கிறது கவிதை.
@Bee'morgan
நன்றி பாலா!
@ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி நண்பரே!
@அனுஜன்யா
நன்றி அனுஜன்யா!
@J.S.ஞானசேகர்
//மனிதர்கள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் தங்களின் முன்னோர் 40,000 ௦பேர் இறந்தது போனதாக எறும்புகள் செல்வதாக வைரமுத்து எழுதினார்.
இப்போது மனிதர்கள் சாகிறார்கள்; செவ்வெறும்புகள் கடிக்க மட்டும் செய்கின்றன. கருப்பு எறும்புகள் திக்கு தெரியாமல் இன்னும் வரிசை தராமல்.//
அட்டகாசம்!
@Nundhaa
நன்றி நண்பரே!
@பிரவின்ஸ்கா
நன்றி பிரவின்ஸ்கா
படிமம் பொருத்தமாக, அழகாக அமைந்திருக்கிறது. நல்ல கவிதை.
Be a roman while in rome, அப்படீங்கிறத எறும்புகளும் அறிந்திருக்கும் போல.
கவிதை அருமை நண்பா.
very nice :)
@ச.முத்துவேல், @ச.பிரேம்குமார், @இலக்குவண், @bhupesh
நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
ரொம்ப நல்லா இருக்கு சேரல்
@மண்குதிரை
நன்றி நண்பரே
-ப்ரியமுடன்
சேரல்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சேரல்.
நன்றி யாத்ரா
-ப்ரியமுடன்
சேரல்
நல்லா இருக்கு சேரல்.
Post a Comment