புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, May 07, 2009

பழைய இறகு

வெகுநாள் கழித்து
மீண்டும் வாசித்த
புத்தகத்தில்
பத்திரமாய் இருந்தது
பக்க அடையாளமாய் வைத்த
ஒற்றை இறகு

இப்போதெங்கே
இரை தேடிக்கொண்டிருக்கும்
இறகு தந்த பறவை?

11 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இப்போதேங்கே/

இப்போதெங்கே?

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

திருத்திவிட்டேன். நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

நன்றாக இருக்கிறது கவிதை.

நந்தாகுமாரன் said...

அந்தப் பறவை ... கோழியா, புறாவா, காடையா, மயிலா, jungle fowl-ஆ, Snake Bird-ஆ, Serpent Eagle-ஆ, ... எது அந்தப் பறவை என்பது தான் என் கவலை ...

ச.பிரேம்குமார் said...

அழகாய் இருக்கிறது கவிதை. வாழ்த்துகள் சேரல் :)

மண்குதிரை said...

நல்லா இருக்கு சேரல். நல்ல உணர்வு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரவின்ஸ்கா

@Nundhaa
வருகைக்கு நன்றி

நன்றி பிரேம்

@மண்குதிரை
நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

நினைவுகள் நம்மை அப்படிதான் எங்கேயோ கூட்டிச் செல்லும். ரொம்ப நாட்கள் முன் இந்த சிந்தனையில் நானும் ஒரு கவிதை எழுதிய ஞாபகம். நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அனுஜன்யா!

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

நல்ல கவிதை சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி யாத்ரா

-ப்ரியமுடன்
சேரல்