புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, May 14, 2009

எல்லா ஊர்களிலும் ஒரு கதை

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

ஆணும் பெண்ணும்
காதலித்தார்கள்

காதலனும் காதலியும்
கட்டிக்கொண்டார்கள்

கணவனுக்கும் மனைவிக்கும்
ஒரு குழந்தை பிறந்தது

இப்பொழுது
குழந்தையின்
தந்தையும் தாயும்
ஒன்றாக வசிக்கிறார்கள்

18 comments:

anujanya said...

இது தான் நடக்கிறது. இயந்திர வாழ்க்கை. நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

மண்குதிரை said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

Dharini said...

hoooooha!!! simply superb!! :)

J S Gnanasekar said...

அசல் அட்டகாசம்.

- ஞானசேகர்

ஆ.சுதா said...

சற்று எனக்கு பிடிபடாத பொருள்,
வெகு இயல்பானதாக இருந்தாலும்
இன்னும் இரண்டு மூனுவாட்டி படித்துப்பார்த்து யோசிக்கிரேன்.

சென்ஷி said...

கலக்கல்... ரொம்ப ரசிச்சு படிச்சேன்!

:-))

Abbasin Kirukkalkal said...

இது பரவாயில்லை

குழந்தையின் தாயும் தாயின் கணவனும்
இல்லை
குழந்தையின் தந்தையும் தந்தையின் மனைவியும்
இதை விட மோசம்

ச.முத்துவேல் said...

கூறுமுறை நல்லாயிருக்குது. வெகு இயல்பாக எழுதப்பட்டு நன்றாக உள்ள கவிதை.

thamizhparavai said...

புரியலை தலை...அடுத்த கவிதையில பார்க்கலாம்...

நந்தாகுமாரன் said...

//

இப்பொழுது
குழந்தையின்

//

என்பது அவசியமா ...

யாத்ரா said...

கவிதை நல்லா இருக்கு சேரல்.

பிரவின்ஸ்கா said...

நன்றாக இருக்கிறது கவிதை.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Selva said...

மிகவும் நன்றாக உள்ளது ....

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

தமக்கென்ற உலகில் இருக்க எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் interdependency நிறைய. என்ன செய்வது?

நட்புடன் ஜமால் said...

எல்லா ஊர்களிலும் ஒரு கதை

தொடர்ச்சியாக இன்னும் ...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

Karthik said...

:) :)