இக்கவிதை 26/08/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் பிரசுரமானது
என்முகம் பார்த்தபடியே
பயணித்தாள்
புருவம் உயர்த்தி
ஆச்சர்யம் காட்டினாள்
முகம் தாழ்த்திக்
கொஞ்சமாய்ச் சிணுங்கினாள்
உதடு வலிக்காமல்
ஏதேதோ முணுமுணுத்தாள்
ஏதோ யோசித்துத்
திடீரெனச் சிரித்தாள்
நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி.
14 comments:
அலைபேசி வந்ததுக்கு அப்புறம் இந்த தொல்லை பெருந்தொல்லை தான்....
ம்ஹூம்
நல்லா இருக்கு கவிதை,
மிகவும் ரசித்தேன்.
நல்லா இருக்கு சேரல்
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
நிகழ்வின் வரிகள் அழகு...
சில பேர் தன்னிடம் தான் பேசுகிறார்கள் என்று பதில் பேசவும் செய்திருகிறார்கள்
ஊர்ல நிறைய பேர் இப்படித் தான் போல .. நம்ம பசங்க தான் பாவம் .. சிரிச்சதுமே "சிறு பொன் மணி அசையும் " ன்னு Back ground பாட்ட கேட்டுட்டு டிக்கட் வாங்காம செக்கர் கிட்ட மாட்டறாங்க .. :-)
இயல்பான பதிவு அண்ணா :-) எந்த வித அலங்காரங்களோ அதிகபட்ச வருணனைகளோ இல்லாத , நேரடியாக உள்ளதைப் பொட்டில் அடித்தார் போல் கவிதை சொல்லுவது தான் தங்கள் பலம் ...
அவளோட blog-ல
என்ன தலைப்புல கவிதை இருக்குமோ
யாரோ ஒரு ..... நான் சொல்லல
\\நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி. \\
Ericsson a black coffee
என்ற விளம்பரம் நினைவில் வந்தது ...
@ச.பிரேம்குமார்
உண்மைதான்.
@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி!
@பிரவின்ஸ்கா
நன்றி!
@தமிழ்ப்பறவை
நன்றி!
@Selva
:) இது மாதிரி நகைச்சுவைகளும் நடக்கின்றன.
@ரெஜோ
ஆமாம் தம்பி :)
@yathra
நன்றி!
@Abbasin Kirukkalkal
ஐயோ! அது என்ன அப்படியே நிறுத்திட்டீங்க? ஏதாவது கெட்ட வார்த்தையா? :)
@நட்புடன் ஜமால்
:) நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
வாழ்த்துகள் சேரா.. :)
சேரல்,
இந்தக் கவிதை எனக்கு பிடிக்கவில்லை.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வாழ்த்துக்கள் சேரல்!
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_17.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
Post a Comment