Sunday, June 07, 2009
வண்ணத்துப்பூச்சி
அசையாதே பெண்ணே!
உன் சேலையின்
எம்பிராய்டரி பூக்களில்
மதுவருந்திக் கொண்டிருக்கிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி
*********
சிறகுகளைப் பிய்த்துப்போட்ட
சிறுவனின் விரல்களில்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது
செத்துப்போன வண்ணத்துப்பூச்சியின்
வண்ணம் உயிரோடு
*********
வண்ணங்கள் தொலைந்த
உலகிலும் இதே
பெயர் கொள்ளுமா
வண்ணத்துப்பூச்சி?
*********
இருட்டறையினுள் படபடக்கும்
வண்ணத்துப்பூச்சியின்
சிறகு சொல்லும்
பாதையில் போனால்
தெரிந்துவிடும்
ஒளி வரும் திசை
*********
இறங்கும்போதுதான் கவனித்தேன்
வழிமாறிப் பேருந்துக்குள்
வந்துவிட்ட வண்ணத்துப்பூச்சியை
யாராவது இறக்கிவிடுங்களேன்
*********
எல்லாப் பூக்களையும்
காகிதத்தில் செய்துவிட்டோம்
அதில் அமர்வதற்கான
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
சிதைக்கப்பட்ட தோட்டங்களில்
*********
பூங்காவின் இருக்கையில்
இடம்பிடித்திருந்த
வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திவிட்டு
அமர்ந்துகொள்ளும் அவர்,
கண்களை மூடிக்கொண்டு
வேர்க்கடலை சாப்பிடுகிறார்
*********
கவனமில்லாமல் சாத்தப்படுகிற
கதவுகளில் அறுந்து விழும்
சிறகுகளைச் சேர்த்து வைக்கிறேன்,
என்றேனும்
சிறகில்லாமல் வாசல்வரக்கூடும்
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கென
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
முதல் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது....மற்றவையும் நன்று
வாவ்!
//
கவனமில்லாமல் சாத்தப்படுகிற
கதவுகளில் அறுந்து விழும்
சிறகுகளைச் சேர்த்து வைக்கிறேன்,
என்றேனும்
சிறகில்லாமல் வாசல்வரக்கூடும்
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கென//
இந்த ஒரு அடியையே பல நூறு விதமாக அர்த்தப்படுத்தி பார்க்கிறது மனசு..
அவ்வளவு ஆழம்.
வாழ்த்துக்கள்.
// வண்ணங்கள் தொலைந்த
உலகிலும் இதே
பெயர் கொள்ளுமா
வண்ணத்துப்பூச்சி? //
அற்புதமாக இருக்கிறது .
அத்தனையும் அழகு..
தேர்ந்தெடுப்பது அவசியமாகிற பட்சத்தில் கடைசி இரண்டுக்கு ஷொட்டு!!
ஒவ்வொரு கவிதைவாசிப்பின்போதும் வண்ணத்துப்பூச்சியொன்று சிறகடித்து மறைந்து போகிறது... நல்ல அனுபவம் கொடுத்த கவிதைகள் சேரல்...
ஒளிப்படமும் வண்ணத்துப்பூச்சி கவிதைகளும் மிகவும் பிடித்திருக்கிறது ... simply superb ... ஒரு சில வரிகள் mind blowing ...
எல்லாமே அருமையான வரிகள் சேரல், வண்ணத்துப்பூச்சியை நீங்கள் காதலித்திருக்கிறீர்கள், அந்த நேசம் கவிதையில் வழிந்து பெருகுகிறது, அழகான கவிதைகள்.
முதல் கவிதை படித்ததும் சேரலின் காதல் கவிதைகளோன்னு நினைச்சேன். வண்ணத்துப்பூச்சி கவிதைகள் அனைத்தும் அருமை சேரல்.
//வண்ணங்கள் தொலைந்த
உலகிலும் இதே
பெயர் கொள்ளுமா
வண்ணத்துப்பூச்சி?
//
இது ரொம்ப ரொம்ப பிடித்தது
//எல்லாப் பூக்களையும்
காகிதத்தில் செய்துவிட்டோம்
அதில் அமர்வதற்கான
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
சிதைக்கப்பட்ட தோட்டங்களில் //
Superb.
வண்ணத்துப்பூச்சகளைப் போலவே அனைத்துக் கவிதைகளும் அழகானவை. அருமையான கவிதைகள் சேரல்.
|எல்லாப் பூக்களையும்
காகிதத்தில் செய்துவிட்டோம்
அதில் அமர்வதற்கான
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
சிதைக்கப்பட்ட தோட்டங்களில்
*********
பூங்காவின் இருக்கையில்
இடம்பிடித்திருந்த
வண்ணத்துப் பூச்சியைத்
துரத்திவிட்டு
அமர்ந்துகொள்ளும் அவர்,
கண்களை மூடிக்கொண்டு
வேர்க்கடலை சாப்பிடுகிறார்
*********
கவனமில்லாமல் சாத்தப்படுகிற
கதவுகளில் அறுந்து விழும்
சிறகுகளைச் சேர்த்து வைக்கிறேன்,
என்றேனும்
சிறகில்லாமல் வாசல்வரக்கூடும்
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கென |
மிகவும் பிடித்த இரண்டு,
\\கவனமில்லாமல் சாத்தப்படுகிற
கதவுகளில் அறுந்து விழும்
சிறகுகளைச் சேர்த்து வைக்கிறேன்,
என்றேனும்
சிறகில்லாமல் வாசல்வரக்கூடும்
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கென \\
இரசித்தேன்.
பாராட்ட வார்த்தைகளை தேடி சேகரிக்கிறேன்..
உன் வண்ணத்துப்பூச்சி அவற்றை பறித்தோடி பறக்கிறது..!
bhupesh,
சரவண குமரன்
மயாதி
பிரவின்ஸ்கா
kartin
தமிழ்ப்பறவை
Nundhaa
yathra
பிரேம்
நிலாரசிகன்
முத்துராமலிங்கம்
ஜமால்
Vilva
நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
//எல்லாப் பூக்களையும்
காகிதத்தில் செய்துவிட்டோம்
அதில் அமர்வதற்கான
வண்ணத்துப்பூச்சிகளை மட்டும்
தேடிக்கொண்டிருக்கிறோம்
சிதைக்கப்பட்ட தோட்டங்களில் //
நண்பா.. அருமை
அனைத்தும் அருமை
எல்லாமே நல்லா இருந்தாலும், சில கவிதைகள் அபாரம். முதல் இரண்டு, நான்காம் மற்றும் ஆறாவது கவிதைகள் simply superb.
அனுஜன்யா
Post a Comment