புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 12, 2009

மாய உலகம்

சேர்த்துக் கொள்ளப்படாத
சிறுவர்களுக்கென்று
உருவாகிறது
ஒரு மாய உலகம்

அங்கே
அவர்களே
சகலமும் ஆகிறார்கள்

பந்து வீசுகிறார்கள்
அவர்களே அதையடிக்கிறார்கள்
ஓடி வந்து பிடிக்கிறார்கள்
அவர்களே ஆட்டமுமிழக்கிறார்கள்

வெற்றியும் தோல்வியும்
ஒருங்கே சூழ
நிம்மதியாய்ப் போய்ச்
சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது

18 comments:

ச.பிரேம்குமார் said...

நிராகரிப்பின் வலியை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் சேரல்

பூங்குழலி said...

பந்து வீசுகிறார்கள்
அவர்களே அதையடிக்கிறார்கள்
ஓடி வந்து பிடிக்கிறார்கள்
அவர்களே ஆட்டமுமிழக்கிறார்கள்

சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது


அவர்களே எல்லாமுமாகி பிறரை நிராகரிக்கிறார்கள் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்

ஆ.சுதா said...

சிறப்பு!
|சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது|

நிராகரிப்பின் குரூரமின்றி இயல்பாக தோன்றும் சிறு வலியினை சொல்லி இருப்பதாகவே உணர்கின்றேன்.


மிக நல்லக் கவிதை.

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம் தோழரே,

//சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது //

அதுதானே உண்மை...பொசுக்குனு எழுதிட்டீங்களே...

பாராட்டுதலைப் போலவே நிராகரிப்பும் கொடுக்கும் உத்வேகம் வித்தியாசமானது அல்லவா...

நன்றாக இருக்கிறது...

ப்ரியமுடன் வசந்த் said...

//சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது //

இது பதிவுலகத்திற்க்கும் பொருந்துமா?

மயாதி said...

வர வர உங்கள் கவிதைகள் வித்தியாசமான பாதைகளில் பரிணாமித்துக் கொண்டே இருக்கிறது , வாழ்த்துக்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரேம்!

நன்றி பூங்குழலி!

நன்றி முத்துராமலிங்கம்!

நன்றி கோகுல்!

@ப்ரியமுடன் வசந்த்,

வருகைக்கு நன்றி நண்பரே! வாழ்க்கை முழுவதற்கும் பொருந்தும். பதிவுலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?

-ப்ரியமுடன்
சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி மயாதி!

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் said...

GIVES PAIN. GOOD.

ny said...

//வெற்றியும் தோல்வியும்
ஒருங்கே சூழ//

expressive ultimatum!!

பிரவின்ஸ்கா said...

//வெற்றியும் தோல்வியும்
ஒருங்கே சூழ
நிம்மதியாய்ப் போய்ச்
சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது //

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

நந்தாகுமாரன் said...

அப்படிப் போடுங்க ...

யாத்ரா said...

அருமை சேரல்.

இராவணன் said...

/
பந்து வீசுகிறார்கள்
அவர்களே அதையடிக்கிறார்கள்
ஓடி வந்து பிடிக்கிறார்கள்
அவர்களே ஆட்டமுமிழக்கிறார்கள்

நிம்மதியாய்ப் போய்ச்
சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது
//
அருமை நண்பா.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ச.முத்துவேல்,
kartin,
பிரவின்ஸ்கா,
Nundhaa,
yathra,
இராவணன்,

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

உயிரோசையில் படித்த ஞாபகம். ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

ஐயோ...அவ்வளவு அழகாய் வந்திருக்கு சேரல் இது.

க.பாலாசி said...

//நிம்மதியாய்ப் போய்ச்
சிறுநீர் கழிக்கிறார்கள்
சேர்த்துக் கொள்ளாத
சிறுவர்களின்
ஆதிக்கத்தின் மீது //

அருமைங்க சேரல்... அப்டியே கிரவுண்ட்ல ரவுண்டடிச்ச மாதிரி இருக்கு...

உங்களோட எல்லாக் கவிதையையும் படிச்சிட்டேன்..இத எப்டி மிஸ் பண்ணினேன்னு தெரியல...