புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, June 18, 2009

சில தருணங்கள்

உங்களுக்கும் நேரலாம்
இப்படி ஒரு தருணம்

முன்பெப்போதோ பழகிய மனிதர்
மீண்டும் எதிர்ப்படுகையில்
முகங்களும் பெயர்களும்
தலைகால் மாறிக்
குழம்பிப்போக

குரல்களின்
குழப்பமான அணிவகுப்பில்
பரிச்சயமான குரல் கேட்டுப்
பின்னோட

யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க

பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப

முகம் பெயர் குரல்
தெரியாத யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க

12 comments:

மயாதி said...

யாரையோ தொலைபேசியில்
அழைத்து
யாருடனோ பேசி முடித்து
வழிந்து சிரிக்க//

அப்படியா?

Venkatesh Kumaravel said...

//யாரோவிடம்
இத்தனையும் சொல்லிப்
புலம்பித்தீர்க்க //
:D
சொல்லவும் வேண்டுமா? அற்புதம்!

ny said...

'யாரோ' க்கள் படித்துப் பரவசமடைகிறார்கள் !
:))

யாத்ரா said...

நல்ல கவிதை சேரல்.

thamizhparavai said...

உணர்வின் நல்ல வெளிப்பாடு...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

ny said...

uyirmmai vaazhthukkal!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி கார்த்தி!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

வந்த பாதை மறந்து போகிறது சேரல் இங்கு வருகிற போதெப்போதும்.வெளியேற்றிவிடுங்கள்.இனி வர போகத்தானே இருப்பேன்.

சி.கருணாகரசு said...

பெயர் மறந்த ஒருவரிடம்
பெயர் கேட்க முடியாமல்
பெயர் சொல்லியும் அழைக்காமல்
ஏதேதோ கதைகள் பேசிக்
கவனமாகத் திருப்பியனுப்ப ///

எனக்கும் கூட நிகழ்ந்ததுதான்.அருமை.

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்...

தொடர்ந்து வாசிக்க நிறைய இருக்கு.

சுபஸ்ரீ இராகவன் said...

azhagu!