புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, June 25, 2009

தவம்

முன்னொருநாள்
பௌத்த பிட்சுகள்
தவமிருந்த நதிக்கரையில்
தவமிருந்தேன்

தூரத்தில்
ஒற்றைக்காலில்
நிலை கொண்டிருந்தது
நெடுங்காலமாய்
இந்த நதியையே
நனைத்துக் கொண்டிருக்கும்
கொக்குகளின் வழி வந்த
ஒரு கொக்கு

பிட்சுகள் பார்த்த கொக்குகளை
நான் பார்க்கவில்லை

எத்தனையோ கொக்குகள்
பார்த்த தவத்தை
இந்தக் கொக்கு
பார்க்கவில்லை

14 comments:

Nundhaa said...

wow ... அபாரம் ... zen ... buddhism ... என்று அசத்தியிருக்கிறீர்கள் ... அருமை ...

ஆ.முத்துராமலிங்கம் said...

கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் தவம் செய்கின்றது. இருந்தும் கவிதை எதனிலோ ஊன்றி நிர்க்கின்றது.

மயாதி said...

பிட்சுகள்//

பிக்குகலையா சொல்கிறீர்கள்.?

வெங்கிராஜா said...

:D
Serene Poetry.

kartin said...

marvellous!!

சேரல் said...

@Nundhaa,
மிக்க நன்றி!

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி!

@மயாதி,
ஆம். பிக்குகள் தான். பிட்சுகள் என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது.

@வெங்கி ராஜா
நன்றி!

@kartin,
மிக்க நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

கவிதை நல்லாருக்குங்க.

கருப்பு வெள்ளை யிலும்
வெள்ளை கருப்பு லும்
இருக்கிறது.
நல்லா இருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Gowripriya said...

!!!!!!!!

நேசமித்ரன் said...

அற்புதம்...!

சேரல் said...

நன்றி பிரவின்ஸ்கா!

@Gowripriya,
:)

@நேசமித்ரன்,
நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

வெங்கிராஜா said...

கவிதையை தளத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். லிங்க்-உடன். அவகாசமிருக்கையில் பார்வையிடவும்.

அனுஜன்யா said...

ஆஹா, ஜென் வரிகள் படிக்கும் உணர்வு. அபாரம்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

பிரமிப்பு சேரல்!

J.S.ஞானசேகர் said...

கொக்கின் தவம்பற்றி ஒரு புதுக்கவிஞர் எழுதிய வரிகள் ஞாபகத்தில்வர, தேடிக் கண்டுபிடித்தேன்.

"துல்லிய நீர்ப்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்ப்பதற்குப் பரவசம்தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குரூரம்"

இக்கவிதை, பிரசுரம் செய்த குறுங்கவிதைகளில் சிறந்த 75ல் ஒன்றென ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டதென நினைக்கிறேன்.

- ஞானசேகர்