புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, June 23, 2009

தொற்றிக்கொண்டவை

எப்படியோ தொற்றிக்கொள்கின்றன

ஒவ்வொரு முறை
ஊருக்குச் செல்லும்போதும்
யாரோ இனங்கண்டு
சொல்கிறார்கள்

பிறகுதான் உணர்கிறேன்
நானும்

மூலம் தேடி அலைக்கழிகிறது
இருப்பு கொள்ளாத மனது

விலாசம் விசாரித்தவரோ,
விலாசம் சொன்னவரோ,
தள்ளுவண்டிக்காரரோ,
பக்கத்து வீட்டுக் குழந்தையோ,
கோயில் வாசல் பிச்சைக்காரரோ
பேருந்துப் பயணத்தில்
அருகமர்ந்து தூக்கம் கெடுத்தவரோ,
அடிக்கடி போகும் தெருவில்
சண்டையிடும்
கருத்த பருமனான பெண்ணோ

யாரோ
ஓட்ட வைத்துப் போய்விடுகிறார்கள்
சில
பரிச்சயமற்ற வார்த்தைகளையும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகளையும்

10 comments:

மயாதி said...

சில நாட்கள் இணையப் பக்கம் வரவில்லை போல...

நல்லா இருக்கு

பரத் said...

//பரிச்சயமற்ற வார்த்தைகளையும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகளையும் //
:)

கவிதை நல்லாயிருக்கு சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@மயாதி,

நன்றி! சொந்த ஊருக்குப் போயிருந்தேன். அதனால்தான் இந்தச் சிறு இடைவெளி.

@பரத்,

நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

ஊருக்கு போனதன் பாதிப்பா? இவை கூட கவிதைக்கான பாடுபொருளாக இருக்கலாமா என்று வியக்க வைக்கிறது கவிதை. வாழ்த்துகள் சேரல்

பிரவின்ஸ்கா said...

கவிதை நல்லா இருக்குங்க
சேரல்

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

யாத்ரா said...

அருமை சேரல், இது எனக்கும் நடந்திருக்கு, இதை கவிதையில் மிக அழகா பதிவு செஞ்சிருக்கீங்க

"உழவன்" "Uzhavan" said...

//சில
பரிச்சயமற்ற வார்த்தைகளையும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகளையும் //

ஆம் சேரல்.. இவைகள் இயல்பாய் எப்போதாவது நடக்கும்.

anujanya said...

எல்லாருக்கும் நிகழ்வதை கவிதையாக மாற்றும் சாகசம் உங்களுக்கு இருக்கு. வாழ்த்துகள் சேரல்.

அனுஜன்யா

பா.ராஜாராம் said...

நுண்ணிய பார்வை...யதார்த்த வெளிப்பாடு.பார்வையை ஏந்த பிரியமாய் வருகிறது சேரல்.வாழ்த்தும் அன்பும் நண்பா..

செல்வநாயகி said...

///எல்லாருக்கும் நிகழ்வதை கவிதையாக மாற்றும் சாகசம் உங்களுக்கு இருக்கு////

same.