புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 05, 2009

ஒத்ததிர்வு

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

நேரெதிர் திசைகளில்
அதிவேகமாகக் கடந்து போய்விட்ட
ரயில்களென இருந்தோம்
நாம்

கடந்துபோன
கணத்தின் அதிர்வு
செல்களில் ஊடுருவி
ஒத்திசைத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் இருவரிலும்

8 comments:

ச.பிரேம்குமார் said...

சும்மா அதிருது :-)))

ஆ.சுதா said...

..ம் அதிர்வை ஏற்படுத்துகின்றது கவிதை. நல்லா இருக்கு கவிதை.

நந்தாகுமாரன் said...

ஆஹா ... சும்ம அதிருதில்ல ... :)

ny said...

இயல்பாக அமர்கிறது
கவிதை உங்களிடம்..

74 கவிதைகளையும்
இங்கிருக்கும்
ரயிலெனக்
கடந்திருந்தேன்...

அதிவேகமாகவும்
அதிர்வுடனும்..
- ஒரே வயதுக்காரன் :)

thamizhparavai said...

நல்லாருக்கு சேரல்...

மாதங்கி said...

கவிதை எனக்குப் பிடித்தது

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ச.பிரேம்குமார்,
@ஆ.முத்துராமலிங்கம்,
@Nundhaa,
@Kartin,
@தமிழ்ப்பறவை,
@yathra,
@மாதங்கி

அனைவருக்கும் மிக்க நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

வாவ், நல்லா இருக்கு.

அனுஜன்யா