புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, June 06, 2009

பழையன

பளபளக்கும் புதுச்சாலையினின்றும்
பிரிந்தோடிச் சென்று
மீண்டும் இணைந்து கொள்கிறது
யாரும் புழங்காமல்
தனிமையில் புழுங்கும்
பழைய மண்சாலை

11 comments:

மயாதி said...

நடந்து போகும் போது எழுதினது போல...
நல்லா இருக்கு

Gowripriya said...

முதன்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் வருகிறேன்... கவிதைகள் அனைத்தும் அருமை :)

ஆ.சுதா said...

|பிரிந்தோடிச் சென்று|

|யாரும் புழங்காமல்
தனிமையில் புழுங்கும்
பழைய மண்சாலை|

வெகுவாக ரசித்தேன் வரிகள் அழகானவை.

ny said...

அபரிமிதமான 'அன்பின் புதுச்சாலைக்கு' நன்றி!!

ny said...

உங்கள் தலைப்பிலிருப்பதால் கேட்கிறேன் :)
நெடுநாட்களாய்த் தலையைக் குடைகிறது..
நிறத்தில் கருமையைக்
குறிக்கும் சொல் 'கருப்பு' -ஆ இல்லை 'கறுப்பு' -ஆ !!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@மயாதி,
நன்றி நண்பரே!

@Gowripriya,
மிக்க நன்றி தோழி!
தொடர்ந்து வாருங்கள்.

@ஆ.முத்துராமலிங்கம்,
மிக்க நன்றி நண்பரே!

@kartin,
வருகைக்கு நன்றி நண்பரே!
'கருப்பு' என்பதே சரியான வார்த்தை. இந்தத் தலைப்பை வைப்பதற்கு முன் நான் மேற்கொண்ட கடுமையான ஆராய்ச்சியின் முடிவாக இதை அறிந்துகொண்டேன் :)

-ப்ரியமுடன்
சேரல்

ச.முத்துவேல் said...

கவிதை நல்லாருக்கு.
@கார்த்தி
எனக்குத் தெரிந்தவரையிலும் கூட கருப்புதான் சரி. கரிய நிறம் என்றுதான் என்றுதான் எழுதுகிறோம். கறிய என்றல்ல. அல்லவா? எளிதில் நினைவில் நிற்க இதைச் சொல்கிறேன்.

thamizhparavai said...

நன்று,,,

நட்புடன் ஜமால் said...

\\யாரும் புழங்காமல்
தனிமையில் புழுங்கும்\\

எதுகை மோனையில் எதார்த்தம்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி முத்துவேல்!

நன்றி தமிழ்ப்பறவை!

நன்றி ஜமால்!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

:))